தஞ்சையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டு அணி டெல்லி அணி என்று சொல்கின்றனர்.. கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாது.. கிரிக்கெட்டில் விசிலை போடுவது சி.எஸ்.கே, வரப் போகும் தேர்தலில் விசிலை போடப் போவது தவெக தான்.. தமிழ்நாடு தான் தவெக, தவெக தான் தமிழ்நாடு.. இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி எல்லாவற்றையும் தவெக அடித்து நொறுக்கும்.. எனக்கும் எனது மக்களுக்கும் நடுவில் யாராலயும் நடுவில் நுழைய முடியாது..
இது அம்மா பையன் உறவு, அக்கா தம்பி உறவு, அண்ணன் தங்கை உறவு.. இது ஆழமான உறவு.. மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது எலக்ஷன், எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கும் இது எமோஷன்.. இது சாதாரண எமோஷன். இது பவர்ஃபுல் ஓசியானிக் எமோஷன்.. இப்படி இருக்கும் போது வீட்டுக்கு வீடு என்பது 100% இந்த தேர்தலில் நிரூபணமாகும்..
ஊழலற்ற உண்மையான சமூக நீதி ஆட்சி அமைய இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு தருவீர்கள் தானே? ஒவ்வொரு பூத்திலும் விசில் சத்தம் கேட்கும் தானே, விசில் சத்தம் ஓட்டாக மாறும் தானே? அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் ஒரு விவசாயா குடும்பத்தில் பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.. நான் விவசாயி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றாலும், எனக்கு விவசாயிகளின் கஷ்டம் நன்றாக தெரியும்..
தவெக ஆட்சி அமைந்த உடன் தீர்க்க வேண்டிய முக்கியமான பிரச்சனைகளில் விவசாயிகளின் பிரச்சனையும் ஒன்று..
தமிழகம் தண்ணீர் இல்லாமல் திவால் ஆகும் என ஐ.நா சபை கூறியுள்ளது.. மண், மலை, கல் என அனைத்தையும் கொள்ளையடித்தால் இது தான் நடக்கும். மணல் மாஃபியாக்களுக்கு திமுக ஆதரவு அளித்து வருகிறது..
டெல்டாகாரன் என சொல்லிக்கொள்ளும் நீங்கள், விவசாயிகள் பிரச்சனைகளுக்கு உண்மையாக நின்றிருக்கிறீர்களா? திமுக ஆட்சிக்கு வந்த உடன் பெரிய திட்டங்களை செய்ய மாட்டார்கள்.. ஆட்சியின் முடிவில் அடிக்கல் நாட்டுவார்கள்.. பின்னர் தேர்தல் வரும் தோற்றுவிடுவார்கள். கேட்டால் ஆட்சி முடிந்துவிட்டது என்று கூறுவார்கள்.. ஆட்சிக்கு வந்த உடனே பெரிய திட்டங்களை எல்லாம் தொடங்க வேண்டியது தானே..
அதென்ன ஆட்சி முடியும் போது அடிக்கல் நாட்டுவது.. ஓட்டுக்காக எது வேண்டுமானாலும் பேசுவீர்கள்.. ஆனால் இதை எல்லாம் நம்புவதற்கு மக்கள் என்ன ஏமாளிகள் என்று நினைத்தீர்களா? மக்களே, நமது ஆட்சி அமைந்த உடன் இந்த மாதிரி பெரிய திட்டங்களை எல்லாம் உடனே தொடங்குவோம்.. 5 ஆண்டுகளுக்கு அதை முடிக்கவும் முயற்சிப்போம்..
காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை பற்றி தெரியுமா என்று கேட்பார்கள்.. அணைகளோ பாதுகாப்பு தன்மையை ஆராயும் ஒரு ஆர்.ஓ.வி தொழில்நுட்பம் வரை நானும் அனைத்தையும் தெரிந்து தான் வைத்திருக்கிறேன்.. ஒருவன் அமைதியாக இருந்தால் அவனுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள்..
கருத்து சொன்னால் எல்லாம் நடந்துவிடுமா? நசநசவென்று பேசி பேசி அதை கேட்டு கேட்டு மக்கள் வெறுத்து போய்விட்டனர்.. மீண்டும் நாம் தான் என்று ஸ்டாலின் சார் பேசி வருகிறார்.. அதெல்லாம் முடியவே முடியாது.. அவங்க அப்பாவால் கூட அது முடியவில்லை.. திமுக மீண்டும் வந்ததாக சரித்தரமே கிடையாது.. ” என்று தெரிவித்தார்..
Read More : “மற்றவர்களுக்கு தான் இது எலக்ஷன், எனக்கும் மக்களுக்கும் இது எமோஷன்..” விஜய் பேச்சு..!



