“திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறினால் தவறில்லை..” நயினார் நாகேந்திரன் பரபரப்பு கருத்து..

nainaar thiruparangundram 1

திருப்பரங்குன்ற விவகாரத்தை வைத்து பாஜக மதக் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.. மேலும் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாக திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டி இருந்தார்.. இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்..


இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அம்பேத்கர் நினைவு நாளில் பாஜக சார்பில் இந்தியா முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.. அம்பேத்கரின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலில் செலுத்துவதை பெருமையாக நினைக்கிறோம்.. வரும் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்..

தொடர்ந்து திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது என்ற திமுக கூட்டணியின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன் “ திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறினால் தவறில்லை.. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. அயோத்தில் இங்கிலாந்திலயோ அல்லது ஐரோப்பாவிலேயே இல்லையே? தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமரின் ஆட்சி போல் இருக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்.. அங்கு தர்கா இருப்பது அனைவருக்கும் தெரியும்.. ஆனால் அந்த தர்காவிடம் போகாமல் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. இதில் மதக்கலவரம் வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழித்துவிடுவோம் என்று சொல்லி இருக்கிறார்.. அதை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் கனவு பலிக்காது.. எத்தனை யுகங்கள் ஆனாலும் சனாதன தர்மத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது..” என்று தெரிவித்தார்..

Read More : “ஹெச். ராஜா சாப்பிட்டு போட்ட எச்சிலையில் எடப்பாடி பழனிசாமி உருள தயாரா..? ” R.S. பாரதி காட்டமான கேள்வி..!

RUPA

Next Post

மதுரை புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியர் பெயர் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Sat Dec 6 , 2025
தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மேலும் வித்திடும் வகையில், மதுரை திருநகர் மேலமடை சந்திப்பில் உள்ள மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலு நாச்சியார் என பெயர் சூட்டப்படுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ முதல்வர் மு.க ஸ்டாலின் மதுரையில் உள்ள திருநகர் மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை நாளை திறந்து வைக்கிறார். இந்த மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் மேம்பாலம் பெயர் […]
tamilnadu cm mk stalin

You May Like