தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வான 621 காவல் சார்பு ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.. 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு மு.க ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்..
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் “ போலீஸ் இருக்கிறார்கள் அவர்கள் நம்மை பார்த்துக் கொள்வார்கள் என நம்பித்தான் மக்கள் நடமாடுகிறார்கள்.. தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம், தமிழ்நாடு அமைதி பூங்கா என்று இந்திய அளவில் கூறுகின்றனர்.. புதிதாக காவல்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.. ஒரு காவலர் செய்யும் நல்ல செயல் அந்த துறைக்கே பெருமையை ஏற்படுத்தி தரும்.. அதே போல் எங்கேயோ ஒரு காவலர் தப்பு செய்தாலும் காவல்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அது பாதிக்கும்.. இந்த பொறுப்பை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும்..
காவல்துறை பொது மக்களின் நண்பர் என்பதை வெறும் வார்த்தையாக இல்லாமல் ரியாலிட்டியில் அதை நிரூபிக்க வேண்டும்.. காவலர்கள் மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.. காவல்துறை இரும்புக்கரத்தையும், அன்புக்கரத்தையும் பயன்படுத்த வேண்டும்.. இரும்புக்கரத்தை குற்றத்தை தடுக்க பயன்படுத்த வேண்டும்.. புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதையுடன் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கவனமாக கையாள வேண்டும்.. போதை பொருள் தடுப்பு விவகாரத்தில் சமரசமின்றி செயலாற்ற வேண்டும்..
காவல்துறையில் நமது ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.. காவலர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.. 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் காவல்துறையை சேர்ந்த குழந்தைகளுக்கு ரூ.30,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.. காவலர் நல அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளது.. இரவு ரோந்து பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு படி வழங்கப்படுகிறது..
இரவு பகல் பாராமல் காவல்துறையினர் உழைப்பதால் தான் முதலமைச்சராகிய நான் தொடங்கி மாநிலத்தின் சாதாரண குடிமக்கள் வரை எல்லோரும் எங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடிகிறது.. இந்த துறையின் முக்கியத்துவம் என்ன? உங்கள் வேலையின் பொறுப்பு என்ன? காக்கி உடையின் மரியாதை என்ன? என்பதை முழுமையாக உள்வாங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டும்.. மாநிலத்தின் அமைதியை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும்.. சட்டம் ஒழுங்கை சமரசம் இல்லாமல் நிலைநாட்ட வேண்டும்..
Read More : பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. இதை நோட் பண்ணுங்க..!



