லத்தி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.. Custody Violence இருக்க கூடாது..! – காவல்துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அதிரடி உத்தரவு

ADGP Davidson Devaseervath 1

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணத்தை தொடர்ந்து காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.

இதனிடையே இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நீதித்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார்.

தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து தனிப்படை டிஎஸ்பி சண்முகசுந்தரமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆசீஸ் ராவத், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் அஜித்குமாரிடம் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை தான் விசாரணை நடத்திய போது அஜித்குமார் இறந்தார். இதனால் தனிப்படை மீது நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அவை பின்வருமாறு..

* Social Media வில் தவறான செய்தி பகிரப்பட்டால் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதன் உண்மைத் தன்மை குறித்து மீடியாவில் பேட்டியாக கொடுக்கலாம். மேலும், State Fact Team-க்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை கண்டிறிய வேண்டும். அது பொய்ச் செய்தியாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது Legal opinion பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

* பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு வந்தவுடன், அவர்கள் அளிக்கும் புகாருக்கு உடனடியாக FIR அல்லது CSR (Community Service Register) பதிவு செய்யப்பட வேண்டும்.
இதற்குள் எந்த விதமான தாமதமும் இருக்கக் கூடாது. மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களிடம் பேப்பர் இல்லை பேப்பர் வாங்கிட்டு வா என்றோ, அதிகாரி இல்லை என்று சொல்லி அலைக்கழிக்கவோ திருப்பி அனுப்பவோ கூடாது.

* பாதுகாப்பு அலுவல் என்றால் காவல் நிலையத்திலிருந்து காவலர்களை மொத்தமாக எடுக்கக்கூடாது. Light Station என்றால் 5 காவலர்களும், Medium Station என்றால் 10 காவலர்களுக்கு குறையாமலும், Heavy Station என்றால் 15 காவலர்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். Station Empty ஆக இருக்க கூடாது.

* காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் யாரேனும் அபாயகரமான ஆயுதங்கள் வைத்துக்கொண்டோ அல்லது பைக் ஸ்டண்ட் செய்தோ ரீல்ஸ் போன்ற பதிவுகள் செய்யக்கூடாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது. அப்படி பதிவு செய்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கோவில்களில் சாமி கும்பிடுவது, திருவிழா நடத்துவது போன்ற நிகழ்வுகளில் சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் மோதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

* Drive against Drugs போதை பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுகள் நடத்தப்பட வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்க வேண்டும்.

* முக்கிய பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை நியமித்தலை தவிர்க்க வேண்டும். முக்கிய பாதுகாப்பு பணிகளுக்கு முன்கூட்டியே Mirror தயார் செய்ய வேண்டும். அதில் காவலர்கள், பெண் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு காவல் படையினர் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

* சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு தகுந்த பயிற்சி கொடுக்க வேண்டும் தேவையில்லாமல் லத்தியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

* கைது செய்யும்போது தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகள் அவசியம். அதனை பிரபலப்படுத்தும் அளவிற்கு இருக்கக் கூடாது.

* முடிந்த அளவிற்கு பெண் காவலர்கள் தாங்கள் வசிக்கும் சொந்த ஊரிலேயே பணி மாறுதல் வழங்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற பெண் காவலர்கள்களுக்கு அவர்கள் கேட்கும் இடத்திற்கே பணி மாறுதல் வழங்க வேண்டும்.

* சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமுக விரோதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும். அதிகப்படியான தடுப்புகாவல் சட்டத்தில் வைக்க முயற்சிகளை எடுக்க வேண்டும்.

* வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக திருட்டு குற்றங்களில் கொள்ளை, கூட்டுக் கொள்ளை, ஆதாய கொலை போன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அத்தகைய குற்றங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

* காவல்துறையில் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும், உயர்நிலையில் உள்ள காவல் அதிகாரிகள் இதை பின்பற்றினால் மட்டுமே கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் காவலர்களை கட்டுப்படுத்த முடியும்.

* அதிகாரிகள் எப்பொழுதும் தன் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் Defensive Methodல் இருக்கக்கூடாது Offensive Method-ல் இருக்க வேண்டும். பணிபுரியும் காவலர்கள் ஏதேனும் தவறு செய்யும்போது அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* காவலர்கள் மற்றும் காவல்துறை வாகனங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

* விசாரணை கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது. Crime team & Special Team -ல் அனுபவம் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தேவையில்லாத துன்புறுத்தல்கள் மற்றும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத Custody இருக்கக் கூடாது.

* திருட்டு வழக்குகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். முழுமையான Recovery என்ற பெயரில் விசாரணை கைதிகளை துன்புறுத்தல் கூடாது.

* விசாரணை முறை தொடர்பாக சரியான பயிற்சியை முன் அனுபவம் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்டு வழங்க வேண்டும்.

* விசாரணையின் போது Crime team & Special Team -ல் பொறுப்பு அதிகாரி இல்லாமல் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு காவலரும் விசாரணை செய்யக்கூடாது.

* ஒரே நபரை முன்று நான்கு நபர்கள் ஒன்றாக சேர்ந்து விசாரிக்க கூடாது விசாரணை என்ற பெயரில் தேவையில்லாத துன்புறுத்தல்கள் கூடாது.

* Custody Death அல்லது Custody Violence இருக்க கூடாது.

* காவல் நிலையங்களில் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் எதுவும் இருக்கக் கூடாது.

* வாகன தணிக்கையின் போது கவனமாக செயல்பட வேண்டும். தேவையில்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது.

* காவல் நிலையம் அல்லது பொது இடங்களில் யாரேனும் ஒருவரால் அசம்பாவிதங்கள் அல்லது தாக்குதல் நடைபெறும் போது அதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* காவலர்கள் சகிப்புத்தன்மையுடன் பணியாற்ற வேண்டும்.

* கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் போன்றவைகளின் புழக்கம் எந்த மாவட்டத்திலும் இருக்கக் கூடாது.

* விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் கடந்த ஆண்டைவிட அதிகமான சிலைகள் வைக்க அனுமதிக்க கூடாது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

* மாவட்ட கலெக்டர் மற்றும் நீதித்துறை உடன் இணக்கமாக இருக்க வேண்டும். மதம் மற்றும் சாதிய தொடர்பான பிரச்சனைகளுக்கு கடிதம் கொடுத்து மாவட்ட நிர்வாகம் முலம் சரியான தீர்வு காண வேண்டும்.

* காவல்துறை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை வளர்க்கவும் மேம்படுத்தவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

* கலப்புத் திருமணம், காதல் விவகாரங்கள் போன்றவைகளில் காவல்துறையினர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

* CCTV கேமராக்கள் அதிக எண்ணிக்கையில் பொருத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

* 60 நாட்களுக்கு மேலாக உள்ள விசாரணை வழக்குகளை உடனடியாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

Read more: அஜித் மரணம் எதிரொலி…! தமிழகம் முழுவதும் உள்ள தனிப்படைகளை உடனே கலைக்க டிஜிபி உத்தரவு…!

Next Post

சட்டவிரோத குடியேற்றம்: ஓசூரில் 4 வங்கதேசத்தினர் கைது..!

Thu Jul 3 , 2025
ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 வங்கதேசத்தினரை நள்ளிரவில் க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் உள்ளது. தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினை உள்ள நிலையில் பிஹார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்தில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை பிரிவுகளின்கீழ் செயல்படும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி […]
arrest1

You May Like