தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி இருந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது. இருவரும் கட்சி நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை அறிவித்தும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.. மேலும் தனது இறுதி மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவர் என்று ராமதாஸ் கூறி வருகிறார். அன்புமணி ராமதாஸோ தனக்கு கட்சியில் அதிகாரம் இருப்பதாக தெரிவித்து வருகிறார்.
இந்த சூழலில் அன்புமணி ராமதாஸ் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று ராமதாஸ் நேற்று அறிவுறுத்தி இருந்தார். தைலாபுரம் இல்லத்திற்கு நீண்ட காலமாக வருகை தராமல் இருந்த அன்புமணி ராமதாஸ் நேற்றைய தினம் அங்கு சென்று தனது தாயை சந்தித்துவிட்டு சென்றார். இது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இன்று விருத்தாச்சலத்தில் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ நான் இருக்கும் இடத்தில் ஒட்டு கேட்கும் கருவி இருந்தது.. லண்டனில் இருந்து வரவைக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி எனது வீட்டில் வைக்கப்பட்டிருந்து. யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.. நேற்று முன் தினம் தான் இந்த கருவி இருந்ததை நாங்கள் கண்டுபிடித்தோம்..” என்று தெரிவித்தார்..
தான் என்ன பேசுகிறேன் என்பதை தெரிந்துகொள்ள ஒட்டு கேட்கும் கருவி இருந்ததாக ராமதாஸ் கூறியிருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read More : “எனக்கு உங்களை தவிர வேறு யாருமில்லை..” அன்புமணி ராமதாஸ் உருக்கமான கடிதம்..