இனி 10 நிமிட டெலிவரி இருக்காது: மத்திய அரசு அறிவுறுத்தல்; பிளிங்கிட், ஜெப்டோ, ஸ்விகி நிறுவனங்கள் ஒப்புதல்..!

zomato swiggy

மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா, டெலிவரி நிறுவனங்களில் இருந்த
“10 நிமிடத்தில் டெலிவரி” என்ற கட்டாய நடைமுறையை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, முக்கிய நிறுவனங்கள் அதை ஏற்க சம்மதித்துள்ளன.


கடுமையான டெலிவரி காலக்கெடு மற்றும் அது டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான கவலைகளைக் கையாள்வதற்காக, பிளிங்கிட், ஜெப்டோ, ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் கடுமையான நேரக்கெடுகள் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பையும் நலனையும் பாதிக்கின்றன என்று அமைச்சர் தெரிவித்தார். அரசின் தலையீட்டிற்குப் பிறகு, பிளிங்கிட் தனது அனைத்து விளம்பர தளங்களிலும் “10 நிமிடத்தில் டெலிவரி” என்ற வாக்குறுதியை முழுமையாக நீக்கியுள்ளது.

பிராண்ட் வாசக மாற்றம்

முன்பு: “10,000+ பொருட்கள் 10 நிமிடத்தில் டெலிவரி” என்று இருந்தது.. இப்போது: “30,000+ பொருட்கள் உங்கள் வீட்டு வாசலில்” என்று மாற்றப்பட்டுள்ளது.. அதே போல் ஜெப்டோ, ஜொமேட்டோ, ஸ்விகி ஆகிய நிறுவனங்களும் தங்களின் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் டெலிவரி நேரத்தை கட்டாயமாக குறிப்பிடுவதை விரைவில் நிறுத்துவோம் என்று மத்திய அரசிடம் உறுதி அளித்துள்ளன.

டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு, வேலை நிம்மதி, வேலை சூழல் மேம்பாடு ஆகியவை இதன் நோக்கமாகும்.. தற்காலிக ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த தேசிய அளவிலான விவாதம் காரணமாக இந்த மாற்றம் நடந்தது..

டிசம்பர் 25 & டிசம்பர் 31 அன்று தற்காலிக மற்றும் டெலிவரி ஊழியர்கள் தேசிய அளவில் வேலைநிறுத்த போராட்டங்களை அறிவித்தன.. அப்போது நிறுவனங்கள் பாதுகாப்பற்ற டெலிவரி மாடல் பின்பற்றுகின்றன என்றும், தங்களின் வருமானம் குறைக்கப்படுகிறது எனவும் சமூக பாதுகாப்பு இல்லை எனவும் ஊழியர்கள் குற்றம்சாட்டினர்..

பாராளுமன்றத்தில் எழுந்த குரல்

AAP மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சதா “ இந்திய டெலிவரி ஊழியர்கள், கடும் அழுத்தம் மழை, வெயில் போன்ற கடின சூழ்நிலையில் வேலை செய்கின்றனர்.. அவர்களுக்கு மரியாதை, பாதுகாப்பு, நியாயமான சம்பளம் இல்லை..” என்று பேசினார்.

விரைவு வர்த்தக மற்றும் செயலி அடிப்படையிலான சேவை நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வர வேண்டும், சமூக பாதுகாப்பு உரிமைகள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“10 நிமிட டெலிவரி” என்ற அழுத்தமான முறை நீக்கப்பட்டதால், டெலிவரி ஊழியர்களின் உயிர் பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும், வேலை அழுத்தம் குறையும் எனவும் தற்காலிக டெலிவரி ஊழியர்களுக்கான மரியாதையும் நலனும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : “ஏதாவது முயற்சி செய்தால் தக்க பதிலடி கொடுப்போம்..” பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

RUPA

Next Post

இந்த அறிகுறிகள் இருந்தால், புற்றுநோய் இருக்கிறது என்று அர்த்தம்..! இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீங்க..!

Tue Jan 13 , 2026
மனித உடலில் பல வகையான புற்றுநோய்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உயிருக்கு ஆபத்தானவையாக இருக்கலாம். இருப்பினும், எந்தவொரு உறுப்பிலும் உள்ள புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இல்லை. ஆனால், சில நேரங்களில் புற்றுநோயை ஆரம்ப கட்டங்களில் கண்டறிவது கடினம். ஏனெனில், ஆரம்ப கட்டங்களில் எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை. சிலருக்கு மிகக் குறைவான அறிகுறிகள் இருக்கலாம், மற்றவர்களுக்கு அறவே இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், நாம் சாதாரணமாகக் கருதும் […]
cancer

You May Like