திமுக ஆட்சியில் ரவுடிகளுக்கு சட்டத்தின் மீது பயமில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது திமுக ஆட்சி நடந்து வருகிறது. ஒருபுறம் திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக செயல்படுவதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.. ஆனால் மறுபுறம் திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.. கொலை, கொள்ளை, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. இதுறித்து திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறிவருகின்றனர்..
அந்த வகையில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக சாடி வருகிறார்.. தற்போது ரவுடிகளின் ஆட்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக ஆட்சியில், ரவுடிகள் தான் ஆட்சி செய்கிறார்கள். ரவுடிகள் காவல் வாகனத்தில் சிறைக்கு கொண்டு செல்லப்படும்போது, ரவுடிகள் காவதுறையினர் துஷ்பிரயோகம் செய்கின்றனர்.. இது இந்த சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீது எந்த பயமும் இல்லை என்பதையே நிரூபிக்கிறது. உண்மையிலேயே வருத்தமளிக்கிறது!” என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் ரவுடிகள் காவல்துறையினரை அவதூறாக பேசுவதையும், ஒரு கட்டத்தில் சிலர் காவல்துறையினரை தாக்குவதையும் பார்க்க முடிகிறது.. மேலும் வீடியோ முழுவதுமே பீப் சவுண்ட் தான் கேட்கிறது..
சென்னை அண்ணா நகரை சேர்ந்த ராபர்ட் என்ற ரவுடி மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட 16 வழக்குகள் உள்ளன.. கடந்த பிப்ரவரி மாதம் ராபர்ட்டை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்த நிலையில், இந்த கொலை தொடர்பாக 6 பேர் காவல்துறையில் சரண் அடைந்தனர்.. இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் கைது செய்தனர்..
புழல் சிறையில் அடைக்கப்பட்ட கொலையாளிகளின் காவலை நீட்டிக்க, சென்னை எழும்பூர் நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் வேனில் போலீசார் அழைத்து வந்தனர்.. காவல் நீட்டிக்கப்பட்ட பிறகு, மீண்டும் போலீஸ் வேனில் சிறைக்கு புறப்பட்டனர்.. இந்த வேனில் தான் ரவுடிகள் போலீசாருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்ததனர்.. ‘உன் மூஞ்ச பார்த்து வச்சிருக்கோம் விடமாட்டோம்.. நாங்களாம் கொலைக்கு மேல கொலை பண்றவங்க.. என்று சொல்லி வேனில் அராஜகம் செய்தனர்.. எனினும் இவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.. இது திமுக அரசின் சட்ட ஒழுங்கு தோல்வியை வெளிப்படுத்துகிறது என்று சமூக ஊடக பயனர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்..
Read More : விஜய்க்காக இரவெல்லாம் காத்திருந்த கவின் தந்தை.. திடீரென வந்த கார்.. நள்ளிரவில் பரபரப்பு..!!