பிரியாணி சாப்பிட்ட பிறகு நிச்சயமாகத் தவிர்க்க வேண்டிய சில வகையான உணவுகள் உள்ளன. அவை என்னென்ன
பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது? சிக்கன், மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, இறால் பிரியாணி என பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வார இறுதியிலும் தொடர்ந்து பிரியாணி சாப்பிடுபவர்களும் உள்ளனர். அவ்வளவு ஏன் தினமும் பிரியாணி கொடுத்தால் கூட சாப்பிடுபவர்களும் இருக்கின்றனர்.. மிகவும் சுவையான பிரியாணி சாப்பிட்ட பிறகு நிச்சயமாகத் தவிர்க்க வேண்டிய சில வகையான உணவுகள் உள்ளன. அவை என்னென்ன என்று தற்போது பார்க்கலாம்..
கூல் ட்ரிங்க்ஸ்
பிரியாணி சாப்பிட்ட பிறகு பலர் கூல் ட்ரிங்க்ஸ் குடிக்க விரும்புகிறார்கள். மசாலாப் பொருட்கள் சேர்த்து சமைக்கப்படுவதால் ஒரு சில பிரியாணி சாப்பிடுவதற்கு காரமாக இருக்கலாம். எனவே பிரியாணி சாப்பிட்ட உடன் பலரும் கூல் ட்ரிங்க்ஸ் குடிக்க விரும்புவார்கள்.. பலருக்கு, பிரியாணி மற்றும் கூல் டிரிங்க்ஸ் சிறந்த காம்போவாகும். ஆனால், தவறுதலாக கூட, பிரியாணி சாப்பிட்ட பிறகு கூல் டிரிங்க்ஸ் குடிக்கக்கூடாது. அப்படி குடிப்பது வாயு பிரச்சனை, அஜீரணம், வயிறு உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பிரியாணி ஒரு சூடான உணவு.. கூல் டிரிங்க்ஸ் உடனடி குளிர்ச்சியை கொடுத்தாலும், கூல் டிரிங்ஸும் சூடானது தான்.. இது உடலில் உணவு-வெப்பநிலை சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. இது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ஐஸ்கிரீம், இனிப்புகள்:
சிலர் பிரியாணி சாப்பிட்ட பிறகு இனிப்பு வகைகளை விரும்புகிறார்கள். குறிப்பாக ஐஸ்கிரீம் மற்றும் இனிப்புகளை சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பிரியாணியில் உள்ள கொழுப்பு பொருட்கள் உடலில் கொழுப்பாக மாறும். அந்த நேரத்தில், சர்க்கரை அதிகமாக உள்ள இனிப்பு வகைகளை மீண்டும் சாப்பிடுவது அஜீரணத்திற்கு வழிவகுக்கும். இது எடை அதிகரிப்பையும் ஏற்படுத்தும்.
பழங்கள், ஜூஸ்:
சிலர் பிரியாணி சாப்பிட்ட உடனேயே பழங்களை சாப்பிடுவார்கள் அல்லது பழச்சாறு குடிப்பார்கள். இருப்பினும், இது உடலுக்கு நல்லதல்ல. பிரியாணி என்பது மசாலாப் பொருட்கள் நிறைந்த ஒரு உணவாகும். பிரியாணி மசாலாப் பொருட்களுடன் கலக்கும்போது பழங்களின் நார்ச்சத்து மற்றும் அமில பண்புகள் செரிமான அமைப்பில் இயற்கைக்கு மாறான விளைவை ஏற்படுத்தும். இது இரைப்பை பிரச்சனை மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.
மில்க் ஷேக்:
சிலர் பிரியாணி சாப்பிட்ட பிறகு மில்க் ஷேக்குகளை குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இது மிகப்பெரிய தவறு. பிரியாணியில் அசைவ பொருட்கள் இருப்பதால், அவற்றில் உள்ள புரதங்கள், பாலுடன் கலக்கும்போது, உடலில் செரிமானத்தை தாமதப்படுத்துகின்றன. இது உணவு விஷம் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
தேநீர்
பலருக்கு பிரியாணி சாப்பிட்ட பிறகு தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. இருப்பினும், பிரியாணி சாப்பிட்ட பிறகு தேநீர் குடிப்பதை சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தேநீர் குடிப்பது பிரியாணியில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதைக் குறைக்கிறது. மேலும், தேநீர் செரிமான அமைப்பில் பிரச்சனையை அதிகரிக்கும்.
பிரியாணி சாப்பிட்ட பிறகு, செரிமானத்தை அதிகரிக்க உடலுக்கு குறைந்தது இரண்டு மணிநேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். லேசான வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானத்தின் மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே நாம் ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியும். சுவைக்காகச் செய்யும் சிறிய தவறுகள் பின்னர் பெரிய உடல்நலப் பிரச்சனைகளாக மாறுவதற்கு முன்பு அவற்றை தடுக்க முடியும்..