தவெகவுடன் கூட்டணி வைக்கப்போகும் கட்சிகள் இவைதான்..!! வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!! அதிர்ச்சியில் திமுக, அதிமுக..!!

tvk vijay n

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனைப் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது.


வலுவான கூட்டணிக் கட்டமைப்பை வைத்திருக்கும் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் வியூகம் வகுத்து வருகிறது. மற்றொருபுறம், யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துச் செயல்படும் கொள்கையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உறுதியாக உள்ளார். அதேசமயம், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த முக்கியக் கட்சிகளுக்கு மத்தியில், நடிகர் விஜய்யும் தனது கட்சியுடன் களமிறங்கியுள்ளதால், அவரை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. சமீபத்தில், அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததன் மூலம், விஜய்யின் கட்சிக்கு மேலும் பலம் கூடியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், தி.மு.க.வுக்குப் போட்டியாக தற்போது விஜய்யின் கட்சியே பிரதான களத்தில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் அதன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதுகுறித்து அக்கட்சியின் நிர்வாகியான அருண்ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், “அரசியல் கட்சிகளை யாரும் சாதாரணமாக எடைபோட வேண்டாம். எப்போது கூட்டணி வைக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் விரைவில் மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே, தமிழக வெற்றிக் கழகம் விரைவில் தனது கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : FLASH | கூண்டோடு ராஜினாமா..!! தவெகவில் இணைந்த 500 பேர்..!! கதிகலங்கி போன திமுக, அதிமுக..!!

CHELLA

Next Post

ராமநாதபுரம் மீனவனுக்கு கனவிலும் எதிர்பார்க்காத சம்பவம்.. கடைசியில் ரெண்டு உயிர் போச்சு..!

Sun Dec 14 , 2025
An unexpected incident for a Ramanathapuram fisherman... a series of tragedies!
ramnad2 1765611500

You May Like