எச்சரிக்கை.. இந்த மாவட்டங்களில் மிக அதிக கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த நாட்களில்?

rainfall 1699931590800 1704797100426

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ நேற்று மாலை, வடக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக,மேற்கு வங்கம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய வங்கதேச பகுதிகளில்‌ நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில்‌ மேற்கு வங்க பகுதிகளில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்‌.


மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, 14-07-2025: தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

15-07-2025: தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஓரிரு இடங்களில்‌ பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. நீலகிரி மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

16-07-2025: தமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஓரிரு இடங்களில்‌ பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல்‌ 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ மலைப்பகுதிகள்‌, நீலகிரி, விழுப்புரம்‌ மற்றும்‌ செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17-07-2025: தமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஓரிரு இடங்களில்‌ பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

நீலகிரி மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ மலைப்பகுதிகள்‌, தேனி, திண்டுக்கல்‌, இருவள்ளூர்‌, ராணிபேட்டை மற்றும்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18-07-2025: தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஓரிரு இடங்களில்‌ பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

நீலகிரி மாவட்டம்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ மலைப்பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி, தென்காசி, இருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌,
திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவையில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

19-07-2025 மற்றும்‌ 20-07-2025: தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மாவட்டம்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ மலைப்பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதியை பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சிலபகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது / மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பறிலை 38-39 செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 “ செல்சியஸை ஓட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

இன்று முதல் தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகள், அரபிக்கடல்‌ பகுதிகள்‌, தென் கிழக்கு வங்கக்கடல், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 45 நாட்களில் தீர்வு கிடைப்பது உறுதி..!! – ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா சொன்ன தகவல்

RUPA

Next Post

18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. சென்னை காப்பகத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! பரபர பின்னணி

Mon Jul 14 , 2025
வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில், தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த காப்பகத்தில் 30க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர். இந்த குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள், தங்களை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக புகார் கூறியதால், காப்பக உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்காப்பகத்திற்கு சமீபத்தில் குழந்தைகள் நல அலுவலர்கள் திடீர் ஆய்வுக்கு வந்தனர்.சிறுமிகளிடம் தனியாகச் சந்தித்து பேசிய போது, அவர்கள் […]
Rape 2025 1

You May Like