“ வேண்டுமென்றே இந்து மதத்தை அவமதிக்கின்றனர்..” ராமர் ஒரு முஸ்லிம்’ என்று கூறிய திரிணாமூல் MLA.. கடுமையாக சாடிய பாஜக..!

tmc mla 1

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா, ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததை அடுத்து, பாஜக அக்கட்சியை கடுமையாக சாடி உள்ளது.. மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி வேண்டுமென்றே இந்து மதத்தை அவமதிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது. சமூக ஊடக தளங்களில் ஒரு காணொளி வெளியானதைத் தொடர்ந்து இந்த அரசியல் மோதல் வெடித்தது.


அந்தக் காணொளியில், காமர்ஹட்டி சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதும், ராமரின் மத அடையாளம் குறித்து கருத்து தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது. “ராமர் இந்து அல்ல.. அவர் ஒரு முஸ்லீம்,” என்று அவர் அந்தக் காணொளியில் கூறுகிறார்.. இந்தக் காணொளி பாஜக தலைவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்து நம்பிக்கைகளைத் தொடர்ந்து அவமதிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மித்ராவுக்கு பாஜக கண்டனம்

பாஜகவின் மேற்கு வங்கப் பிரிவு மித்ராவைக் கடுமையாக விமர்சித்ததுடன், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களால் இந்து கடவுள்களையும் இந்து நம்பிக்கைகளையும் அவமதிக்காமல் இருக்க முடியவில்லை என்று கூறியது. மேலும்” இப்போது திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா, ராமர் ஒரு முஸ்லிம், இந்து அல்ல என்று கூறுகிறார். நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் மீதான இந்த தொடர்ச்சியான துஷ்பிரயோகம் ஒரு தற்செயலான வார்த்தை தவறு அல்ல! மாறாக, இது சட்டவிரோத வங்கதேசத்த்னருக்கு ஒரு தெளிவான செய்தியாகும். அதாவது, திரிணாமுல் காங்கிரஸ் மிகவும் இந்து விரோதக் கட்சி, எனவே அது அவர்களின் நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கிறது,” என்று அக்கட்சி கடுமையாக சாடி உள்ளது.

இத்தகைய அறிக்கைகள் திரிணாமுல் காங்கிரஸின் சித்தாந்த நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன என்று தெரிவித்துள்ள பாஜக, “இன்னும் சில மாதங்களில், இத்தகைய இந்து விரோதத் தலைவர்கள் இனி அதிகாரத்தில் இருக்க மாட்டார்கள்” என்றும் தெரிவித்துள்ளது.

பாஜக தலைவர் பிரதீப் பண்டாரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரைக் கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில், இது “இந்து மதத்திற்கு வேண்டுமென்றே செய்யப்பட்ட அவமதிப்பு.. திரிணாமுல் காங்கிரஸ் இந்த நிலைக்குத்தான் தரம் தாழ்ந்துள்ளது: இந்து நம்பிக்கைகள் மீது தினசரி தாக்குதல்கள், இந்து மதத்தையும் வங்காள மக்களின் மரபுகளையும் கேலி செய்வது, மற்றும் ஒரு வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த மலிவான அரசியல்..

இத்தகைய அறிக்கைகள் அறியாமையிலிருந்து மட்டும் வருவதில்லை; அவை அரசியல் ஆதரவிலிருந்து வருகின்றன. மம்தா பானர்ஜி அமைதியாக இருப்பதால் ​​இந்த அவமதிப்புக்கு அவரது ஒப்புதல் உள்ளது என்பது தெளிவாகிறது,” என்று பண்டாரி மேலும் கூறினார்.

மித்ரா விளக்கம்

இருப்பினும், வளர்ந்து வரும் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில், மித்ரா அத்தகைய கருத்தைத் தெரிவித்ததை மறுத்தார். தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், ராமர் பெயரில் ஏதேனும் சட்டப்பூர்வ உரிமை உள்ளதா என்று மட்டுமே தான் கேள்வி எழுப்பியதாகவும் தெளிவுபடுத்தினார்.

Read More : இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வாய்ஸ்மெயில் சேவையை அறிமுகம் செய்த Truecaller..! இது எப்படி வேலை செய்கிறது?

RUPA

Next Post

7 கோடி PF பயனர்களுக்கு குட்நியூஸ்..! EPFO அதிரடி முடிவு; இனி எந்தச் சிக்கலும் இல்லை!

Fri Dec 19 , 2025
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 7 கோடி பிஎஃப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கி உள்ளது.. பிஎஃப் உறுப்பினர்களுக்கான ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.. இனி, ஒரு வேலையை விட்டுவிட்டு மற்றொரு வேலையில் சேரும்போது, ​​வார இறுதி நாட்களும் பண்டிகை விடுமுறை நாட்களும் பணி இடைவெளியாகக் கருதப்படாது. மேலும், இரண்டு வேலைகளுக்கு இடையில் 60 நாட்கள் வரையிலான இடைவெளியும் தொடர்ச்சியான […]
epfo 1

You May Like