நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்லத் திட்டமிட்டிருந்த 18 வயது மாணவி, அவரது தந்தை மற்றும் மாமா ஆகியோரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவி மாணவி சந்த்ரிகா சௌதரி, 23 வயது இளைஞரான ஹரேஷை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், அதில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், தங்கள் மகள் கல்லூரிக்கு சென்றால் காதல் வலையில் சிக்கி விடுவார் என நினைத்து அவரை கல்லூரிக்கு அனுப்புவதை பெற்றோர் மறுத்து வந்துள்ளனர். இதற்கிடையே, மாணவியின் காதல் விவகாரமும் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதனால், மாணவியிடம் இருந்த செல்போனை பறித்து வைத்துக் கொண்டனர். மேலும், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, தனது காதலனுடன் மாணவி பேசி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, மாணவியின் தந்தை விஷம் கலந்த பாலை அவருக்கு குடிக்க கொடுத்துள்ளார். அதை குடித்து மாணவி மயங்கியது, அவரது மாமா, துணியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், இந்த கொலையை மறைப்பதற்காக அந்த கிராம மக்களிடம் தனது மகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நம்ப வைத்துள்ளனர்.
ஆனால், மாணவியின் காதலன் இந்த விவகாரம் தெரிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் பெற்றோரின் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவியின் மாமாவை போலீசார் கைது செய்த நிலையில், அவரது தந்தையை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, அந்த மாணவி இறப்பதற்கு முன் தனது காதலனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், ”என்னை உன்னுடன் அழைத்துச் சென்றுவிடு. வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்பவரை நான் திருமணம் செய்ய மறுத்து விட்டால், என்னை கொலை செய்து விடுவார்கள்” என்று கடைசியாக மெசேஜ் அனுப்பியுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Read More : தெருநாய்கள் அப்பாவி..!! இப்படி திட்டம் போட்டு கொலை பண்ணுறீங்களே..!! நடிகை சதா வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!!