வானத்தைப் போல, அன்னம், மருமகள் போன்ற சன் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் மான்யா ஆனந்த். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது சினிமா வாய்ப்புகள் குறித்தும் தான் சந்தித்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளார்.. அப்போது பேசிய அவர் “ நடிகர் தனுஷின் டீமில் இருந்து ஷ்ரேயாஸ் என்பவர் எனக்கு மெசேஜ் செய்திருந்தார்.. என்னிடம் ஒரு ஸ்க்ரிப்ட் உள்ளது, பண்ணுறீங்களா என கேட்டார்.. அதற்கு நான் ஓவர் கிளாமரா இருந்தா நடிக்க மாட்டேன், ரொம்ப ரொமாண்டிக்காக இருந்தாலும் நடிக்க மாட்டேன். ஒரு டீசண்டான கேரக்டர் இருந்தால் நடிப்பேன் என்று கூறினேன். அவர் தனுஷ் சார் படமாக இருந்தாலும் பண்ணமாட்டீங்களா? எனக் கேட்டார்.. யார் படமாக இருந்தாலும் பண்ணமாட்டேன் என்று கூறிவிட்டேன்..
தொடர்ந்து அந்த நபர் ‘கமிட்மெண்ட் இருக்கும்’ என்று சொன்னார்.. அப்படின்னா என்ன என்று கேட்டேன். ஹீரோ கூட கமிட்மெண்ட் இருக்கும் என்று சொன்னார்.. நான் அதெல்லாம் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.. பின்னர் சில நாட்கள் கழித்து இதே போல் இன்னொரு மேனேஜரிடமிருந்து எனக்கு மேசேஜ் வந்தது.. அவரும் தனுஷ் படத்தில் நடிக்க சான்ஸ் தருவதாக கூறினார்.. ஸ்கிரிப்டையும் எனக்கு அனுப்பினார்..” என்று கூறினார்.
எனினும் நடிகை மான்யா கூறிய இந்த சம்பவங்கள் உண்மையிலேயே தனுஷ் தரப்பில் இருந்து நடந்ததா அல்லது அவரின் பெயரை பயன்படுத்தி வேறு யாரேனும் மோசடிகள் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு தனுஷின் மேனேஜர் ஷ்ரேயாஸ் இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.. அதில் தனது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக அவர் கூறியிருந்தார்.. ஒருவேளை நடிகை மான்யா அது போன்ற ஒரு மோசடி வலையில் சிக்கி இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வந்தனர்..
இந்த நிலையில் நடிகை மான்யா ஆனந்த் இதுகுறித்து விளக்கமளித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “ நான் தனுஷ் மீது குற்றம்சாட்டியதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. தனுஷ் சார் பெயரை பயன்படுத்தி சில இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சமீபத்தில் நான் அளித்த பேட்டியில் தெளிவாக கூறியிருந்தேன்.. அது ஒரு விழிப்புணர்வுக்காக தான் நான் பேசியிருந்தேன். ஆனால் சில யூடியூப் சேனல்கள் அதை எடிட் செய்து தங்கள் விளம்பரத்திற்காக ஒரு விழிப்புணர்வு வீடியோவை குற்றச்சாட்டு வீடியோவாக மாற்றி உள்ளனர்..
எனவே நான் தனுஷ் மீது குற்றம்சாட்டியதாக வலம் வரும் செய்தி தவறானது.. ஒரிஜினல் வீடியோ இருக்கும் போது, எனது பெயரை பயன்படுத்தி இன்னொருவரின் பெயரை அவதூறு செய்கின்றனர்.. அது தவறான செய்தி.. மான்யா ஆனந்த் தனுஷ் மீது குற்றம்சாட்டியதாக பரவும் வீடியோ முழுக்க முழுக்க தவறான செய்தி.. அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அதற்காக தான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். சில யூ டியூப் சேன்லகள் எனது பெயரை பயன்படுத்தி தனுஷ் சார் பெயரை கெடுக்கின்றனர்.. எனவே இந்த உண்மையை நான் தெளிவுப்படுத்த வேண்டும். என்ன உண்மையோ அதை பேசுங்கள்.. தவறான செய்தியை பரப்பாதீங்க.. நான் தனுஷ் மீது குற்றச்சாட்டு வைத்ததாக கூறியது தவறான செய்தி.. இதற்கு நான் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.. இதை இங்கேயே நிறுத்துங்கள்.. பொய் செய்தியை மேலும் பரப்ப வேண்டாம்..” என்று தெரிவித்தார்..
Read More : அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இந்திய இயக்குநர்கள்: ஒரு தமிழ் இயக்குனர் கூட லிஸ்டுல இல்ல..!



