பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் அமீத் நிஷாத் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இரு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. அப்பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அமீத் என்பவருடன் நெருக்கமாக பழகியுள்ளார்.
இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அமீத்தை அந்த பெண் தொடர்ந்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அமீத் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த சூழலில், நேற்று இருவரும் லூதியானாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் திருமண விவகாரம் தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அப்பெண், திடீரென கத்தியை எடுத்து அமீத்தின் அந்தரங்க உறுப்பில் குத்தியுள்ளார். வலியால் துடித்த அமீத், ஆத்திரத்தில் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவாக இருந்த கொலையாளி அமீத் நிஷாத்தை சில மணி நேரங்களிலேயே காவல்துறையினர் கைது செய்தனர். தாக்குதலில் காயம் அடைந்த அமீத், தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் லூதியானா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Read More : FLASH | கூண்டோடு ராஜினாமா..!! தவெகவில் இணைந்த 500 பேர்..!! கதிகலங்கி போன திமுக, அதிமுக..!!



