பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. எனினும் அவ்வப்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பினர் பொது வெளியில் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர்..
இந்த நிலையில் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளராக செயல்பட்டு வரும் எம்.எல்.ஏ அருள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்..
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக எம்.எல்.ஏ அருள் கார் மீது அன்புமணி தரப்பு நிர்வாகிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.. வடுக நத்தம் பட்டியில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும் வழியில் காரை மறித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.. அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அருள் எம்.எல்.ஏ கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
அருள் எம்.எல்.ஏ மற்றும் உடன் சென்ற காரையும் வழிமறித்து சரமாரியாக தாக்கியதில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.. கற்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்கியதில் அருளுடன் சென்றவர்கள் காயம் அடைந்தனர்.. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
அருள் இதுகுறித்து பேசிய போது “ பாமக மாவட்ட செயலாளர் ஜெய பிரகாஷ் மற்றும் அவருடன் இருந்த சுமார் 15 ரவுடிகள் முதலில் எங்கள் கார்களை கற்கால் தாக்கினர்.. உடனே நாங்கள் வண்டியை நிறுத்திவிட்டோம். மிகப்பெரிய பட்டாக்கத்தி உடன் ஒருவர் கொல்ல வந்தார்.. என்னுடன் இருந்தவர்கள் என்னை காப்பாற்றிவிட்டனர்.. என்னை கொலை செய்யும் முயற்சியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையில் புகாரளித்துள்ளோம்.. காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்..” என்று தெரிவித்தார்.
Read More : மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளர்களுக்கு எப்போது பணம் கிடைக்கும்..? வெளியான அப்டேட்..



