சமூக ஊடகங்களில் அவ்வப்போது பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.. அந்த வீடியோவில் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் சக பயணிகள் முன்னிலையில் ஒரு ஜோடி செய்த மோசமான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது… அந்த வீடியோவில் கிட்டத்தட்ட இந்த ஜோடி ரயிலை ஒரு ஓயோ ரூமாக மாற்றியுள்ளது என்பதை பார்க்க முடிகிறது..
ஒரு பெண்ணின் மேல் படுத்திருக்கும் ஒரு ஆண், அவருக்கு லிப் கிஸ் கொடுப்பதை பார்க்க முடிகிறது.. அந்த பெண்ணும் அவரின் தலை முடியை கோதி விடுகிறார்.. இந்த முழு நிகழ்வும் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் நடக்கிறது.
பயணிகள் பெரும்பாலும் தங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.. பொது போக்குவரத்தில் முத்தமிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் இந்த ஜோடி, அறை கிடைக்காதபோது, அவர்கள் ரயிலையே ஒரு OYO ரூமாக மாற்றி உள்ளர்.
ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் பொது போக்குவரத்தில் தனிப்பட்ட இடத்தை மதிப்பது மிகவும் முக்கியம் என்று அதிகாரிகள் பலமுறை பயணிகளை எச்சரித்துள்ளனர்.. ஆனாலும் பொதுமக்கள் அதை கேட்பதாக இல்லை.. வீடியோ வைரலான பிறகு, இணையத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. பலரும் இந்த ஜோடியை கண்டித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ @divyakumaari என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டுள்ளது, இது இதுவரை மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பலர் வீடியோவை லைக் செய்துள்ளனர்.. ஒரு பயனர் சகோதரரே, இவர்களைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படையுங்கள்..” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் “இவர்கள் வெட்கமற்றவர்கள், இவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றுகிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பயனர் “ இவர்களால்தான் எல்லா இடங்களிலும் அசுத்தம் பரவுகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.