இனி மகளிர் உரிமைத்தொகை இவர்களுக்கு கிடையாது.. வெளியான முக்கிய அப்டேட்..!

magalir urimai thogai 2025

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.


அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் தொடங்கியது. அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தமிழகத்தில் விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். 

குடும்ப தலைவி மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் இருக்கும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நவம்பர் 14-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், உரிமைத் தொகை கோரி புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களை வருவாய்த் துறையினர் தீவிரமாக களஆய்வு செய்து வருகின்றனர்.

அதில் குடும்ப வருமானம் உள்ளிட்ட தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது. விண்ணப்பித்தவர்களின் ரேஷன் கார்டில் சரியான முகவரி இல்லை என்றாலும் ஆயிரம் ரூபாய் கிடைக்காது என கூறப்படுகிறது.

Read more: ராகு கேது பெயர்ச்சி: இந்த மூன்று ராசிக்காரர்களும் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாற வாய்ப்பு..!

English Summary

They no longer have women’s rights.. Important update released..!

Next Post

100 அடி நீர்வீழ்ச்சி நேரடியாக தீர்த்தக்குளத்தில் சேரும் அதிசயம்.. திருப்பதி மலை அடிவாரத்தில் இப்படி ஒரு கோவிலா..?

Mon Oct 27 , 2025
The miracle of a 100-foot waterfall directly flowing into the Tirupati pond.. Is there a temple like this at the foot of the Tirupati hill..?
temple 2 1 1 1

You May Like