கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பெங்களூரு சுரங்கச் சாலை (Tunnel Road) திட்டத்தைப் பற்றி வெளியிட்ட ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. அதாவது “இன்றைக்கு கார் இல்லாத ஆண்களை யாரும் திருமணம் செய்ய விரும்புவதில்லை என்று அவர் கூறியிருந்தார்.. டி.கே. சிவகுமாரின் இந்தக் கருத்தை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார்.
டி.கே. சிவகுமார் என்ன பேசினார்?
டி.கே. சிவகுமார் இதுகுறித்து பேசியபோது, “மக்கள் கார்கள் வாங்குவதில் உள்ள சமூகக் காரணத்தை தேஜஸ்வி சூர்யா புரிந்துகொள்ளவில்லை. ஒருவர் தன் வாகனத்தை பயன்படுத்துவதை நான் தடுக்க முடியாது. இது சமூகப் பொறுப்பு என்ற விஷயம். மக்கள் தங்கள் குடும்பத்துடன் தனிப்பட்ட வாகனங்களில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். நாம் அவர்களை அதை செய்ய வேண்டாம் என்று சொல்ல முடியாது. எம்.பி.க்கள் தங்கள் தொகுதியில் உள்ள மக்களிடம் ‘வாகனங்களை வீட்டில் விட்டு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள்’ என்று கூறலாம். பார்த்து விடலாம், எத்தனை பேர் அதைச் செய்கிறார்கள் என்று. இப்போது கார் இல்லாத ஆண்களுக்கு தங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்க பலரும் தயங்குகிறார்கள்,” என்று கூறினார்.
தேஜஸ்வி சூர்யாவின் பதில்:
தற்கு பதிலளித்த தேஜஸ்வி சூர்யா “இத்தனை நாட்களாக இந்த சுரங்கச் சாலை திட்டம் பெங்களூருவின் போக்குவரத்து பிரச்சனையைத் தீர்க்கும் என நினைத்தேன். ஆனால் துணை முதல்வர் இப்போது இது ‘கார் இல்லாத ஆண்களை திருமணம் செய்ய விரும்பாத’ சமூக பிரச்சனையைத் தீர்க்கும் திட்டம் என விளக்கமளித்துள்ளார். நான் எவ்வளவு முட்டாள்தனமாக நினைத்தேன்!” என்றார்.
அதே சமயம், அவர் சுரங்கச் சாலை திட்டத்தை கைவிடுமாறு கோரி, “மக்களை அல்ல, வாகனங்களை இயக்கும் திட்டங்கள் உருவாக்கப்படக்கூடாது. பெங்களூருவுக்காக பாரம்பரியத்தை விட, ஒரு காயத்தைக் கடத்திச் செல்கிறார் சிவகுமார்,” என்று கூறினார். அவர் மேலும், இந்தத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்திலும், தெருக்களிலும் போராட்டம் நடத்தப் போவதாக எச்சரித்தார்.
மேலும் “சுரங்கச் சாலை பெங்களூருவை மேலும் நெரிசலடையச் செய்யும்.. இந்த ரூ.43,000 கோடி மதிப்பிலான சுரங்கச் சாலை திட்டம் பெங்களூருவை மேலும் நெரிசலடையச் செய்யும்; இதுவே தீர்வு அல்ல.. இந்த பணத்தை மெட்ரோ ரெயில், புறநகர் ரெயில், ட்ராம் மற்றும் பல அளவிலான பஸ்கள் (BMTC) மூலம் கடைசி நிலை இணைப்பை மேம்படுத்தும் பணிகளில் முதலீடு செய்தால், நகரத்தின் போக்குவரத்து பிரச்சனையைச் சரியாக தீர்க்க முடியும்,” என்றார்.
மேலும் “சுரங்கச் சாலைக்காக செலவிடப்படும் ஒவ்வொரு 1,000 கோடிக்கும் ஒரு மணிநேரத்தில் சுமார் 1,800 கார் பயணிகளுக்கு மட்டுமே பயன் கிடைக்கும். ஆனால் அதே தொகையை மெட்ரோ ரெயிலில் முதலீடு செய்தால், ஒரு மணிநேரத்தில் 69,000 பயணிகளுக்கு பயன் கிடைக்கும்,” என்று தெரிவித்தார்..
Read More : ‘ஓட்டுக்காக பிரதமர் மோடி டான்ஸ் கூட ஆடுவார்’: பீகாரில் ராகுல் காந்தி அட்டாக்.. பாஜக கொடுத்த பதிலடி.!



