எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…
நிறுவனம்: ரயில்வே வாரியம்
காலியிடங்கள்: 3115
கல்வித்தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில் (Trade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Welder (Gas and Electric), Sheet Metal Worker, Lineman, Wireman, Carpenter, Painter (General) தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது.
தேர்வு முறை: 10ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2022
Eastern Railway Apprentice Slots விண்ணப்பம் செய்வது எப்படி? www.rrcer.com – kolkata என்ற இணைய பக்கத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சாதிச் சான்றிதழ், நகல் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் லாஸ் போட்டோ, கையொப்பம், 8 மற்றும் 10ஆம் வகுப்பு கல்வி சான்றுகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.