fbpx

’9 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் பெண்’..!! கூகுள் மேப்பில் சிக்கியது எப்படி..?

உங்களுக்கு ஏதேனும் உணர்வு அல்லது ஏதேனும் சம்பவம் நடக்கும் போது அதை ஏற்கனவே நடந்து இருப்பது போல தோன்றும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் உங்கள் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது இதே மாதிரி இதே விஷயத்தை முன்னரே நீங்கள் பேசி இருக்கிறீர்கள் என்பது போன்ற உணர்வு ஏற்படும். உலகம் எவ்வளவு தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்டு நவீனமாக மாறி வந்தாலுமே, இதுபோன்ற புரிதலுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் இன்னும் இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் லண்டனில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த வகையில், லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் தற்செயலாக கூகுள் மேப் மூலம் பில்லியனில் ஒருவர் என்ற அதிசய நிகழ்வில் இணைந்திருப்பது தொடர்பான செய்திதான் தற்போது நெட்டிசன்களை வியக்க வைத்திருக்கிறது. சரியாக 9 ஆண்டுகள் இடைவெளிக்கு முன் எடுக்கப்பட்ட கூகுள் மேப்பின் street view-ல் இருந்த பெண் ஒருவர், இப்போதும் அதே இடத்தில் அதேபோல நின்றுகொண்டு இருந்திருக்கிறார். அந்தச் சம்பவம் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

’9 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் பெண்’..!! கூகுள் மேப்பில் சிக்கியது எப்படி..?

கடந்த 2009ஆம் ஆண்டு லண்டனின் விக்டோரியா பிளேஸ் பகுதியில் லீன் கார்ட்ரைட் என்ற பெண் ஒருவர் சாலையை கடப்பதற்காக சிக்னல் கம்பம் முன்பு கையில் ஒரு பையுடன் நின்று கொண்டிருக்கிறார். அதேப் பெண் கடந்த 2018ஆம் ஆண்டு தன்னுடைய 41-வது வயதில் அதே விக்டோரியா ப்ளேஸ் பகுதியில் கையில் பையுடன் சாலையை கடக்க அதே சிக்னல் கம்பம் முன்னாடி காத்திருந்திருக்கிறார். இந்த இரண்டு தற்செயலான சம்பவத்தின்போதும் அப்பெண் கூகுள் மேப்பின் street view-ல் தென்பட்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை இங்கிலாந்தின் கார்லிஸ்லே பகுதியைச் சேர்ந்த லீன் கார்ட்ரைட் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

’9 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் பெண்’..!! கூகுள் மேப்பில் சிக்கியது எப்படி..?

இதுகுறித்து பேசியுள்ள லீன், “இது ஏதோ அந்த நொடியிலேயே உறைந்து போனது போல இருக்கிறது. அதே இடத்தில் அதே மாதிரி பையுடன் நடைப்பாதை அருகே நின்றிருக்கிறேன். இதை பார்க்கும் போது மிகவும் வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்கிறது. மக்களுக்கெல்லாம் ஏதோ நான் டைம் டிராவல் செய்தவர் போல இருக்கிறது. ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு அதே இடத்தில் பிடிபட்ட ஒரே நபர் நான்தான். என் கணவர் ரிச்சர்ட்தான் இதனை முதலில் கண்டறிந்தார்.

அவர் வேலையில் இருந்த போது எதேர்ச்சையாக 2018இல் நடந்ததை கண்டவர் இதேப்போன்று 2009இல் இருந்ததையும் கண்டறிந்தார். முதலில் அந்த ஃபோட்டோக்களை பார்க்கும் போது விசித்திரமாகவே உணர்ந்தேன். இதுபற்றி அலுவலகத்தில் கூட கூறினேன். ஆனால், அவர்களை அதை வேடிக்கையாக பார்த்தார்கள். பின்னர்தான் ஃபேஸ்புக்கில் பகிர நினைத்தேன். ஏனெனில் இது எல்லோருக்கும் நடந்திருக்குமா? என தெரியவில்லை. என்னுடைய பதிவுக்கு பலரும் லைக் செய்திருந்தார்கள். என்னை டைம் டிராவலர் என்றும் சிலர் கூறினார்கள். நான் மீண்டும் அதே இடத்திற்கு செல்வேனே எனத் தெரியவில்லை. ஆனால், விக்டோரியா ப்ளேஸை கடக்கும் போது இனி சிரிப்புதான் வரும்” எனக் கூறியிருக்கிறார்.

Chella

Next Post

ராஜ்கிரண் மகளுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்த ZEE தமிழ்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Thu Oct 6 , 2022
ராஜ்கிரண் மகள் பிரியாவுக்கும், அவரது காதலன் முனீஸ்ராஜாவுக்கும் ஜி தமிழ் டிவி திருமணம் செய்து வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90-களில் கலக்கியவர் நடிகர் ராஜ்கிரண். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தது. முன்னணி நட்சத்திரங்களுக்கு இணையாக ராஜ்கிரண் படம் வசூல் சாதனை படைத்தது. 1989ஆம் ஆண்டு ’என்னை பெத்த ராசா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கினர். தொடர்ந்து […]
ராஜ்கிரண் மகளுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்த ZEE தமிழ்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

You May Like