fbpx

நிலத்திற்கு அடியில் ஓர் உலகம்….சொன்னால் நம்ப முடிகிறதா?… சொகுசு வாழ்க்கை வாழும் மக்கள்!

ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் சுமார் 1500 வீடுகள் , அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் ஆகியவைகளுடன் ஒரு கிராமம் இருப்பது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் கூப்பர் பேடி கிராமம் அமைந்துள்ளது. முன்னதாக, 1915 ஆம் ஆண்டில் இந்த பகுதியில் மாணிக்கக்கல் எடுப்பதற்காக பல்வேறு சுரங்கங்கள் தோண்டப்பட்டன. இதையடுத்து, தாதுக்கள் இல்லாத சுரங்கங்களை, அதில் வேலை செய்யும் மக்கள் வசிக்க பயன்படுத்தத் தொடங்கினர்.

இருப்பினும், குளிர்காலத்தில் வெப்பநிலை சீராக இருப்பதாலும், கோடைக்காலங்களில் வெப்பநிலை 45 டிகிரியை விட அதிகமாகும் என்பதாலும், வெப்பத்தை தாங்கமுடியாமல் மக்கள் அடிப்படை வசதிகளோடு வீடுகளை கட்டி சுரங்கத்திற்குளேயே வசித்து வருகின்றனர். படிப்படியாக, சுமார் 1500 வீடுகள் , அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் என அனைத்தையும் சுரங்கத்திலேயே ஏற்படுத்தியுள்ளனர்.

வெளியில் பார்க்க சாதாரணமாக தெரியும் ஆனால் உள்ளே வந்தால் பிரமிக்க வைக்கும். மேலும் இந்த கிராமத்திற்கு, 25 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் இருந்து பைப் மூலம் நிலத்திற்கு அடியிலேயே நீரை கொண்டுவந்து பயன்படுத்திவருகின்றனர். இந்த கிராம மக்களின் அழகிய வாழ்க்கை முறை அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

காதலியுடன் ரொமான்ஸ்...திடீரென வந்த தாய்... காதலனுக்கு ஏற்பட்ட சோகம்...

Sun Feb 5 , 2023
காதலியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது தாய் வந்ததால், தப்பிக்க நினைத்து மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன், உயிரிழந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சய். சேலம் கொல்லப்பட்டி பகுதியில் இயங்கிவரும் தனியார் சட்டக்கல்லூரியில் பயின்று வரும் இவர், அதே பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கிவந்துள்ளார். இந்தநிலையில், நேற்று நள்ளிரவு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து […]

You May Like