விரைவில் ஆதாரில் QR ஸ்கேன் செய்தால்தான் சேவைகள் கிடைக்கும் என்ற நிலை வர இருப்பதாக UIDAI தெரிவித்துள்ளது.
ஆதார் (யுஐடி) என்பது 12 இலக்க தனித்துவமான எண்ணாகும். இது நாடு முழுவதும் உங்கள் அடையாளத்தை சரிபார்க்க உதவுகிறது. சரிபார்ப்பின் நோக்கத்திற்காக சேவை செய்வதைத் தவிர, புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், புதிய சிம் இணைப்புகளைப் பெறவும், ரயில் / பஸ் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யவும் ஆதார் தனிநபருக்கு உதவுகிறது. உங்கள் விவரங்கள் அனைத்தும் உங்கள் முகவரி, மாநிலம், நகரம், தொடர்பு எண், விழித்திரை ஸ்கேன், விரல் அச்சிட்டு போன்றவை. இந்நிலையில், ஆதார் அட்டையை பலரும் பாதுகாப்பாக பயன்படுத்துவதில்லை என்று UIDAI தெரிவித்துள்ளது.

தற்போது வெறும் 12 நம்பர் இருந்தாலே போதும் என்ற நிலை இருப்பதால் பலர் ஆதாரை கிழிந்த நிலையில் வைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. விரைவில் QR ஸ்கேன் செய்தால்தான் பல சேவைகள் கிடைக்கும் என்ற நிலை வர இருப்பதால் அட்டையை பத்திரமாக வைத்திருங்கள் என்று UIDAI தெரிவித்துள்ளது.