fbpx

நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் கோபுரம் தெரியும் அதிசயம்.? இக்கோயில் எங்கு அமைந்துள்ளது.!?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் அதற்கென தனிச்சிறப்புடைய வரலாறு, அதிசயங்கள், மற்றும் மர்மங்கள் என பல இருந்து வருகிறது. அந்த வகையில் ஒரிசா மாநிலத்தில் பூரி கடற்கரையில் அமைந்திருக்கும் வைணவ கோவில்களில் ஒன்றுதான் பூரி ஜெகன்னாதர் ஆலயம். இக்கோயிலின் தனிச்சிறப்புகள் என்ன என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?

பொதுவாக கோயில்களில் கடவுளின் சிலைகள் கற்களால் செய்யப்பட்டு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வழிபட்டு வருகிறோம். ஆனால் இக்கோயிலில் மட்டுமே மரத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை இருந்து வருகிறது. மேலும் இந்த சிலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை  புதுப்பிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. இக்கோயிலின் கருவறையில் கிருஷ்ணர், பலராமர், சுபத்திரை என மூன்று கடவுள்களும் ஒரே இடத்தில் இருந்து காட்சியளிக்கின்றனர் என்பது சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

இக்கோயிலின் தனி சிறப்பாக கருதப்பட்டு வருவது, நகரின் எந்த பகுதியில் இருந்து இக்கோயிலை பார்த்தாலும் கோயிலின் கோபுரம் நம்மை பார்த்துக் கொண்டே இருப்பது போல தெரியும். இதனால் அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் கடவுள் நம்மளை கண்காணித்துக் கொண்டே இருப்பார் என்று பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.

மேலும், பூரி ஜெகநாதர் கோயிலின் கோபுரத்தில் ஒரு கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இது சாதாரண கொடியல்ல. காற்று எந்த திசையில் வீசுகிறதோ அதற்கு எதிர்ப்பக்கமாக இந்த கொடி பறக்கும். எவ்வளவு வெயில் அடித்தாலும் இக்கோயிலின் கோபுரத்தின் நிழல் கீழே விழுவது இல்லை. மேலும் இந்த கோயிலில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் அளவு எப்போதும் கூடுவதோ, குறைவதோ இல்லை. ஆனால் பக்தர்கள் கூடினாலும், குறைந்தாலும் பிரசாதம் மிஞ்சுவதுமில்லை. பக்தர்களுக்கு கிடைக்காமல் போவதுமில்லை. இது இக்கோயிலின் அதிசயமாக இருந்து வருகிறது. இவ்வாறு பல்வேறு அதிசயங்களை கொண்ட இந்த கோயிலை பார்ப்பதற்காகவே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Rupa

Next Post

10, 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு... இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்...! அரசு அதிரடி உத்தரவு...!

Wed Feb 14 , 2024
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அதன்படி 11-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 4-ம் தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 26-ம் தேதியும் தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகின்றன. இந்நிலையில் அரசு தேர்வுத் துறை சார்பில் பொதுத் தேர்வு பணிகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 200-க்கும்மேற்பட்ட […]

You May Like