கண்மாய்களிலிருந்து களிமண், வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுக்க விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் சார்பில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் / வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இயற்கை வளங்கள் துறையின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளிலிருந்து களிமண் / வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணம் இன்றி எடுத்து பயன்பெறுவதற்காக தொடங்கி வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட 95 நீர்நிலைகளில் களிமண் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 95 நீர்நிலைகளில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு இலவசமாக வண்டல் மண் / களிமண் எடுக்க அரசிதழ்கள் வெளியிடப்பட்டு, இவ்வரசிதழ்களை dharmapuri.nic.in என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண் / களிமண் எடுத்து பயன்பெற https://tnesevai.tn.gov.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
Read more ; மருந்தாகும் குழந்தையின் தொப்புள் கொடி..!! அடேங்கப்பா, இதுல இத்தனை மருத்துவ நன்மைகளா?