பப்பாளி பழம் மிகவும் பிரபலமான மற்றும் சத்தான உணவு பொருளாக இருக்கிறது. நம் மாநிலத்தில் பப்பாளியை பழுக்க வைத்து நாம் ருசித்து சாப்பிடும் நிலையில் ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பப்பாளி பழுப்பதற்கு முன்பே காய்கறியாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பப்பாளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. இதனை சாப்பிடுவது இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது. தற்போது ஒரு மீடியம் சைஸ் பழுத்த பப்பாளியில் அடங்கியிருக்கும் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் அதனை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பல ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
முழுமையாக வளர்ச்சியடைந்து மற்றும் இயற்கையாகவே பழுக்கும் பப்பாளி பழத்தில் ஃபோலேட், வைட்டமின் ஏ, ஃபைபர், காப்பர், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாந்தோத்தேனிக் ஆசிட் (Pantothenic acid) உள்ளிட்டவை அடங்கி இருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் நமக்கு மைக்ரோகிராம் அளவில் தேவைப்பட்டாலும் கூட பல முக்கிய உடல் செயல்பாடுகளை செய்ய மிகவும் பயனுள்ள சத்துக்களாக இருக்கின்றன. தோராயமாக 275 கிராம் அளவு எடை கொண்ட ஒரு மீடியம் சைஸ் பப்பாளியில் 1.3 கிராம் ப்ரோட்டீன்ஸ், 30 கிராம் கார்போஹைட்ரேட்ஸ், 4.7 கிராம் டயட்ரி ஃபைபர் (Dietary fiber), 119 கலோரிகள் மற்றும் 21.58 கிராம் சர்க்கரை அடங்கி இருக்கிறது.
பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள் :
பப்பாளியில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நம்முடைய இதயத்தை பல ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், பப்பாளியில் பப்பைன் (Papain) மற்றும் சைமோபப்பைன் (Chymopapain) அடங்கி உள்ளன. இவை செரிமானத்திற்கு உதவுவதோடு ஆர்த்ரைடிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற அழற்சி நிலைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது. பப்பாளியில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், பப்பாளியில் உள்ள நேச்சுரல் பிக்மென்ட்டான லைகோபீன், ப்ரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
பப்பாளியை எப்படி சாப்பிடலாம்..?
நன்கு பழுத்த பப்பாளியை சாப்பிட பல வழிகள் உள்ளன. பழுத்த பப்பாளியின் தோலை உரித்து பழத்தில் காணப்படும் விதைகளை முறையாக நீக்கி கொள்ள வேண்டும். பப்பாளி பழத்தின் சதையில் பால் போன்ற கசிவை நீங்கள் கண்டால், அதை கழுவி பின் சாப்பிடலாம். பப்பாளியை கொண்டு ஸ்மூத்திஸ் மற்றும் பப்பாளி சாலட்ஸ் செய்து சாப்பிடலாம்.
அலர்ஜி :
ஊட்டச்சத்து மிக்க சுவையான பழமாக இருந்தாலும் கூட பப்பாளியை சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும். பப்பாளியால் ஏற்படும் பொதுவான அலர்ஜி Inflammatory Bowel Disease ஆகும். இது தவிர சருமத்தில் அரிப்பு, கண்களில் வீக்கம் மற்றும் லேசான தலைவலி உள்ளிட்ட அலர்ஜிகளும் ஏற்படலாம். இவை Anaphylaxis என வகைப்படுத்தப்படுகிறது. பப்பாளியை சாப்பிட்ட பின் நீங்கள் ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டதை போல் உணர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்.