fbpx

நீங்கள் அடிக்கடி மது குடிப்பவரா..? இந்த நன்மைகளை அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!

நீங்கள் அடிக்கடி மது குடிப்பவர் என்றால், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை காண “Dry Month” என்ற கான்செப்டை முயற்சித்து பாருங்கள். அதாவது ஒரு மாதத்திற்கு மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிடுவது ஆகும். அந்த ஒரு மாதத்திற்கு மது குடிப்பதை தவிர்ப்பதால், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பல நேர்மறை மாற்றங்கள் ஏற்படும். ஒரு மாதம் மதுப்பழக்கத்தை கைவிடுவதால், என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

தூக்கம் :

மது பழக்கத்தை நிறுத்தியதும் உங்கள் உடலானது ஒரு Detoxification Process-இல் என்டர் ஆகிறது. உங்கள் கல்லீரலுக்கு Metabolizing Alcohol செயல்முறையில் இருந்து ஓய்வு கிடைக்கிறது. மதுவை நிறுத்திய முதல் வாரத்தில் எரிச்சல், மனநிலை மாற்றங்கள், தூங்குவதில் சிரமம் போன்ற சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால், படிப்படியாக இரவு தூக்கத்தின் தரம் அதிகரிக்கும். எனவே, ஆல்கஹால் எடுக்காமல் இருப்பதன் மூலம் ஒருகட்டத்தில் நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

மனநிலை :

மதுவை நிறுத்திய இரண்டாவது வாரத்தில் மனம் மற்றும் மனநிலை ஆகிய இரண்டுமே முன்பை விட தெளிவாகவும், சிறப்பாகவும் இருக்க துவங்கும். மதுப்பழக்கம் மனச்சோர்வு, சோகம் மற்றும் பதட்டம் போன்ற பல எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும். இந்த சூழலில் நீங்கள் ஆல்கஹாலை எடுக்காமல் இருப்பதால், உங்கள் மூளை கெமிக்கல்ஸ்களை ரீபேலன்ஸ் செய்ய தொடங்குகிறது. இதன் விளைவாக எதிர்மறை குறைந்து நேர்மறையான கண்ணோட்டம் மற்றும் ஆற்றல் அளவுகள் அதிகரிக்கும்.

ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும் :

நீங்கள் மதுவை நிறுத்தி ஒரு மாதம் நெருங்கும் போது உங்கள் கல்லீரல் அதன் இயல்பான வேலையை செய்யும் அளவிற்கு ஆரோக்கியமாகிறது. கல்லீரல் நச்சு நீக்கம், வளர்சிதை மாற்றம் மற்றும் ஊட்டச்சத்து சேமிப்பு உள்ளிட்டவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவை தவிர்ப்பது கல்லீரல் அழற்சி மற்றும் அதில் கொழுப்பு சேருவதை குறைத்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது.

எடை :

மதுவை நிறுத்திய 3-வது வாரத்தில் உங்கள் உடல் நலன் படிப்படியாக சிறப்பாவதை உணர்வீர்கள். மது குடிக்கும் போது ஆரோக்கியமற்ற உணவுகள் எடுத்துக் கொளப்படுகிறது. இதனால் உடல் எடையும் கூடுகிறது. மதுவை நிறுத்துவதால் உடலில் இருக்கும் கூடுதல் எடை குறைந்து, ஆரோக்கியமான எடையை அடைவீர்கள். மேலும், மதுவை நிறுத்துவதால் உடல் மற்றும் சருமம் நீரேற்றம் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

Read More : சவுக்கு சங்கர் வழக்கில் அவசர கதியில் உத்தரவு பிறப்பிப்பு..!! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக திரும்பிய 3-வது நீதிபதி..!!

English Summary

Abstaining from alcohol for a month can bring many positive changes to your overall health. Now let’s see what benefits will come from giving up alcohol for a month.

Chella

Next Post

300 யூனிட் இலவச மின்சார வழங்கும் பிரதமர் சூர்யா கர் திட்டம்!… புதிய அப்டேட் இதோ!

Tue Jun 11 , 2024
MSEDCL has urged customers to use the Prime Minister Surya Khar Scheme, which provides 300 units of free electricity.

You May Like