ஓய்வூதியதாரர்கள் தங்களின் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம். தற்போது ஆன்லைன் மூலமாக டிஜிட்டல் முறையில் உங்களின் ஆவணங்கள் அனைத்தையும் மிக பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அதற்காக டிஜி லாக்கர் எனப்படும் டிஜிட்டல் லாக்கரை மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் பொதுமக்கள் டிஜிட்டல் லாக்கரில் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
பொதுமக்கள் மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களும் தங்களின் பென்ஷன் சான்றிதழை இதில் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்த சேவையை பல வங்கிகளும் வழங்கி வரும் நிலையில், தற்போது பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியும் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, டிஜி லாக்கரில் பென்சன் சான்றிதழ் பெறுவது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அதற்கு முதலில் உங்களின் மொபைலில் டிஜிலாக்கர் ஆப் டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு உள்ளே நுழைந்து உங்களின் ஆதார் கார்டு அல்லது மொபைல் எண் மற்றும் ஐந்து இலக்க பின் நம்பர் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின்னர் ஓடிபி மூலமாக உங்களின் மொபைல் சரிபார்க்கப்படும். அதன் பிறகு டிஜிலாக்கர் ஆப்பிள் search documents பகுதிக்குச் சென்று, அதில் pension documents என பதிவிட வேண்டும். அதில், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா என்பதை தேர்வு செய்து ஓய்வூதியதாரரின் பிறந்தநாள் மற்றும் பிபிஓ எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பிறகு உங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இது முடிந்த பிறகு get டாக்குமெண்ட் என்பதை கிளிக் செய்தால் உங்களின் பென்ஷன் சான்றிதழ் வந்துவிடும். அதே சமயம் மொபைலில் வாட்ஸ் அப்பிலும் டிஜிலாக்கர் ஆவணங்களை பார்த்து டவுன்லோட் செய்யலாம். அதற்கு 9013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் hi என அனுப்பிய உடன் அதில் சொல்லப்படும் வழிமுறையை பின்பற்றி பென்ஷன் ஆவணம் உட்பட டெஜி லாக்கரில் உள்ள ஆவணங்களை பார்த்து எளிதில் டவுன்லோட் செய்ய முடியும்.