இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். ஏனெனில் மற்ற போக்குவரத்துகளை விட ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு. ரயிலில் பயணம் செய்வதற்கு பெரும்பாலான பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து விடுகிறார்கள். இந்நிலையில், ஐஆர்டிசி டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தற்போது புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. அதாவது டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பாக பயணிகள் ஐஆர்சிடிசி கணக்கை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மொபைல் எண் மற்றும் இ-மெயில் ஐடி போன்றவற்றை சரிபார்ப்பது மிகவும் அவசியம். ஏனென்றால், கொரோனா காலகட்டத்தின் போது பலர் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் இருந்ததன் காரணமாக தற்போது ஐஆர்சிடிசி கணக்கை சரிபார்க்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கணக்கை சரிபார்த்தால் மட்டும்தான் உங்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.