fbpx

இன்று ஆடி பிரதோஷம்..!! சிவனை இப்படி வழிபட்டால் ஜென்ம பாவங்கள் நீங்கும்..!! குழந்தை பாக்கியம் கிடைக்கும்..!!

சிவனுக்கு உரிய நாளாகப் பிரதோஷம் கருதப்படுகிறது. பௌர்ணமிக்கு 3 நாள் முன்னதாகவும், அமாவாசைக்கு 3 நாள் முன்னதாகவும் வருவதே திரயோதசி. இதுவே பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஞாயிற்றுக்கிழமையான இன்று சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இதோடு சேர்ந்து பிரதோஷமும் வருவதால், இது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு கால நேரத்தில் பிரதோஷம் வருவதால், இது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான ராகு கால நேரத்தில் பிரதோஷம் நடைபெறுகிறது. இந்த நாளில் சிவனை வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து துன்பங்களும் விலகும். இந்தப் பிரதோஷ பூஜைகளில் கலந்து கொண்டால், ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். குறிப்பாக நந்தி தேவனை வணங்கி விட்டு பின்னர் சிவபெருமானின் வழிபாடு செய்வது நமக்கு இரடிப்பு பலன்கள் கிடைக்கும்.

மேலும், இந்த சிறப்பான நாளில் பசு மாடுகளுக்கு உணவளித்தால் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்து விட்டு பின்னர் சிவன் கோயில்களுக்குச் சென்று பிரதோஷ அபிஷேகத்திற்குப் பொருட்களை வாங்கி கொடுத்தால் தலைமுறை துன்பங்களும் விட்டு விலகும் என்பது ஐதீகமாகும்.

Chella

Next Post

அனைத்து பள்ளிகளும் ஞாயிற்றுக்கிழமை திறக்க உத்தரவு...! எந்த மாநிலத்தில் தெரியுமா...?

Sun Aug 13 , 2023
ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் கீழ் ஹர் கர் திரங்கா மற்றும் மேரி மதி மேரா தேஷ் திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநிலத்தின் அனைத்து அடிப்படை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளையும் ஞாயிற்றுக்கிழமை திறக்க உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு வெளியிடப்பட்ட உத்தரவுகளின்படி, அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு மதிய உணவு வழங்கப்படும். இதன்படி ஆகஸ்ட் 13ம் தேதியான இன்று அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு கவிதைப் போட்டி நடத்தப்படும். […]

You May Like