fbpx

பாத்ரூம் செப்பல் வெறும் ரூ.8,990 மட்டுமே..!! EMI வசதியும் உண்டு..!! நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

நவீன உலகம் என்னதான் முன்னேறி இருந்தாலும் இன்றளவும் செல்வந்தர்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் பலவும் எளியோர்களால் பயன்படுத்த முடியாத நிலையே இருக்கின்றன. அதேசமயம், எளியவர்கள் உபயோகிக்கும் பொருட்கள் பலவற்றை ஆடம்பர பொருட்களாக பாவித்து அதனை பல ஆயிரங்களில் விற்கும் நிறுவனங்களும் இருக்கின்றன.

அந்த வகையில் Hugo boss என்ற தளத்தில் சாமானியர்கள் அணியும் ஹவாய் செப்பல் என சொல்லக்கூடிய காலணியை 8,990 ரூபாய்-க்கு விற்கப்படுவதாகவும் அதன் உண்மையான விலை 19 ஆயிரத்து 500 ரூபாய் என்றும் 54 சதவிகித தள்ளுபடி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபோக அந்த ஃப்ளிப் ஃப்ளாப் செப்பலை இ.எம்.ஐ. எனும் தவணை முறையிலும் வாங்கலாம் என்ற அம்சத்தையும் ஹூகோ பாஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. hugo boss போன்ற தளங்களில் சாதாரணமாக மக்கள் அணியக்கூடிய சில அணிகலன்கள் கூட பல ஆயிரங்களில் விற்கப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இந்த செப்பலும்.

இது தொடர்பான விளம்பரத்தை கண்ட பயனர் ஒருவர் அதிர்ச்சியடைந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவு வைரலாகி நெட்டிசன்கள் பலரை ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கியிருக்கிறது. அதன்படி, “இது பாத்ரூம் செப்பல் டூட்” , “வெறும் 150 ரூபாய் விலைகொண்ட இந்த செருப்பு 9,000க்கு விற்கப்படுகிறதா? அதுவும் ஆஃபருடன்” என அந்த போஸ்ட்டை ரீட்வீட் செய்து வருகிறார்கள்.

Chella

Next Post

மருமகனுடன் சாகும் வரை உல்லாசம் வேண்டும்., தாய் எடுத்த முடிவு.! தந்தைக்கு நேர்ந்த விபரீதம்.!

Tue Oct 18 , 2022
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை அருகே அச்சங்குளம் பகுதியில் சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு ராணி என்ற மனைவியை இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார். கணவர் ஞானசேகரன் மீன் வியாபாரம் செய்து வந்த நிலையில், அன்றாடம் இரவு நேரத்தில் தூத்துக்குடிக்கு மினிவேனில் மீன் வாங்கிக்கொண்டு மறுநாள் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் வியாபாரம் செய்வார். இப்படி இரவு நேரங்களில் கணவர் வீட்டுக்கு வராமல் இருப்பதை ராணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்று […]

You May Like