கடந்த 25 ஆண்டுகளில் அதிக எடை மற்றும் உடல் பருமனின் பாதிப்பு சட்டென உயர்ந்துள்ளது. இது பல இதயம் தொடர்பான நோய்களுக்கு பங்களிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், பிஎம்ஐ மற்றும் அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்புக்கும் இடையிலான தொடர்பை கண்டறிய நடந்த ஆய்வுகள் சீரற்றவையாக இருந்தன. இதை புரிந்துகொள்ள அமெரிக்காவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, 5,54,332 பெரியவர்களின் தரவுகளை ஆய்வு செய்தது.
அதில் சுமார் 35% பேர் 25 முதல் 30 வரையிலான பிஎம்ஐயை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக அதிக எடை என வரையறுக்கப்படுகிறது. மேலும் 27.2% பேர் 30க்கு மேல் அல்லது அதற்கு சமமான பிஎம்ஐயை கொண்டிருந்தனர். இது பொதுவாக உடல் பருமன் என வரையறுக்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளின் சராசரி பின்தொடர்தலில் 75,807 இறப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வயதானவர்களுக்கு, 22.5 மற்றும் 34.9-க்கு இடையில் எந்த பிஎம்ஐக்கும் இறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை. இளையவர்களில் 22.5 மற்றும் 27.4-க்கு இடையில் எந்த பிஎம்ஐக்கும் இறப்பு குறிப்பிடத்தக்க அதிகரிக்கப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக, 30 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ கொண்ட பெரியவர்களுக்கு, எடை காரணமாக இறப்பு அபாயம் 21% முதல் 108% வரை அதிகரித்துள்ளது. பிஎம்ஐ இறப்பு தொடர்பை முழுமையாக வகைப்படுத்த, எடை வரலாறு, உடல் அமைப்பு மற்றும் நோயுற்ற விளைவுகளை உள்ளடக்கிய கூடுதல் ஆய்வுகள் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதிக எடை வரம்பில் உள்ள பிஎம்ஐ பொதுவாக அனைத்து காரணங்களால் ஏற்படும் இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது அல்ல என்று கூறியுள்ளனர்.