fbpx

சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா..? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..?

சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா வேண்டாமா என்ற குழப்பம் பல சமயங்களில் உண்டாகிறது. பல நூற்றாண்டுகளாக வெல்லம் இனிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கரும்பில் இருந்து வெல்லம் கைமுறையாக தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் வெல்லம் சாப்பிடுவதால் சர்க்கரை அதிகரிக்காது என்று சிலர் நம்புகிறார்கள். அதேசமயம், இதில் இனிப்பு அதிகம் உள்ளதால், சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.

வெல்லம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வெல்லம் சர்க்கரைக்கு சிறந்த மற்றும் ஆரோக்கியமான மாற்றாகும். வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஆர்கானிக் வெல்லம் எப்பொழுதும் இரசாயனமற்றதாகவே இருக்கும். எனவே சாதாரண வெல்லத்தை விட ஆர்கானிக் வெல்லம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா..? Healthyfem ஹெல்த் இணையதளத்தின் படி, நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு சமைக்கும்போது, ​​செயற்கை இனிப்புக்குப் பதிலாக இயற்கை இனிப்பானைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், அனைத்து இயற்கை இனிப்புகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த வழி அல்ல. பதப்படுத்தி தயாரிக்கப்படும் வெள்ளைச் சர்க்கரையை விட ஆர்கானிக் பொருட்களால் செய்யப்பட்ட வெல்லம் சிறந்தது. வெள்ளை சர்க்கரையைப் போலன்றி, ரசாயனங்கள் மற்றும் பிற பொருட்கள் ஆர்கானிக் வெல்லத்தில் சேர்க்கப்படுவதில்லை. அதேசமயம் அதை அளவாக பயன்படுத்தினால்தான் அதன் நன்மையை முழுமையாக பெற முடியும். காரணம், 100 கிராம் வெல்லத்தில் 98 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதே நேரத்தில் இது 383 கலோரி ஆற்றலை வழங்குகிறது. 100 கிராம் சர்க்கரையில் 100 கிராம் கார்போஹைட்ரேட் காணப்படுகின்றது. அதாவது, சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் இரண்டு கிராம் குறைவான கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. எனவேதான் நீரிழிவு நோயாளிகளும் வெல்லம் சாப்பிட பரிந்துரைக்கப்படுவதில்லை.

அப்படியானால் என்ன சாப்பிட வேண்டும்..? சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு உணவின் மீது நாட்டம் அதிகரித்தால், இஞ்சி, துளசி, இலவங்கப்பட்டை போன்ற மூலிகை பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இவை அனைத்திலும் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவு. இது தவிர, ஸ்டீவியா செடியின் இலைகள் (இதை சர்க்கரை துளசி, சீனித்துளசி என்றும் அழைப்பார்கள்) சாப்பிடலாம். இதில் கிளைசெமிக் குறியீடும் மிகக் குறைவு. அதேபோல் இனிப்பு பழங்களையும் உட்கொள்ளலாம்.

Chella

Next Post

போனில் பேசியது ஒரு குத்தமா….? 2 மகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு…..! ராஜபாளையம் அருகே சோகம்….!

Wed May 24 , 2023
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் இவர் வெல்டிங் தொழிலாளியாக இருந்து வருகிறார் இவருக்கு ராமுத்தாய் (30) என்ற மனைவியும், நிஷா(6), அர்ச்சனா தேவி(3) என்ற 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை வேலை முடிவடைந்து வீட்டிற்கு வந்த முத்துக்குமார் மனைவி ராமுத்தாய் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராமத்தாய் […]

You May Like