நத்தை என்பதே மிகவும் சிறிய மெதுவாக நகரக்கூடிய உயிரினங்களில் ஒன்று. இதற்கு கேட்கும் உணர்வுகள் கிடையாது. உப்புத்தன்மை இந்த உயிரினங்களுக்கு நச்சுத்தன்மையை உண்டாக்கும். இருந்தாலும் இவற்றின் வாழ்க்கையின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று அவற்றின் தூக்கம் தான். அதாவது, சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? ஆம், அதற்கான காரணம் என்னவென்றால் மெதுவாக நகர்வதில் பேர் போன நத்தை உயிர் வாழ்வதற்கு ஈரப்பதமான சூழலை தேடுகிறது.
அதற்காக அவை இயற்கை இலையே ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை கொண்டுள்ளன. இதனால், இயற்கையான வானிலை சூழ்நிலையை பொறுத்து அது 3 ஆண்டுகள் வரை தூங்குகின்றன. சில நத்தைகள் பகல் முழுவதும் தூங்கி விட்டு இரவில் மட்டும் புத்துணர்ச்சியுடன் நடமாடும். இதில் ஒரு சில நத்தைகள் சில ஆண்டு காலம் மட்டுமே உயிர் வாழும். பொதுவாக நத்தைகள் ஒவ்வொரு 13 முதல் 15 மணி நேர இடைவேளையில் தூங்குகின்றன. இந்த தூக்கத்தில் கிடைத்த ஆற்றலில் அடுத்த 15 மணி நேரங்கள் வேலை செய்து மீண்டும் தூங்குகின்றன. சில பாலைவன நத்தைகள் தரைக்கடியில் குழி தோண்டி அதில் 3 வருடங்கள் வரை தூங்குகின்றன. புவியியல் அடிப்படையில் நத்தைகள் வெப்பமான தட்பவெப்ப நிலைகளில் இருந்து தப்பிப்பதற்கு அடிக்கடி உறங்கும் என்று கூறப்படுகிறது.