fbpx

தினசரி பயன்படுத்தும் டூத் பேஸ்டை வைத்து இவ்வளவு விஷயம் செய்யலாமா..? இனி பணம் மிச்சமாகும்..!!

காலை கடனில் முதலில் நாம் துவங்குவது பேஸ்டுடன்தான். பல் துலக்கிய பின்புதான் எதையும் செய்ய வேண்டும் என்பதே சுகாதாரப்பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது. அதனால்தான் காலை எழுந்ததும் கைகளும் கால்களும் நேராக பேஸ்டை நோக்கி செல்லும். இனி அதற்காக மட்டுமல்ல இந்த விஷயங்களுக்கும் பேஸ்டை யூஸ் பண்ணலாம் என்பது தெரியுமா..?

— பற்பசையை சிறிது தண்ணீரில் கலந்து, நகைகளை பளபளக்க செய்யலாம். இந்த கரைசலை உங்கள் தங்க நகைகளில் தடவி, மென்மையான பிரெஷ் அல்லது துணியால் மெதுவாக தேய்க்கவும். பின்னர் நகைகளை தண்ணீரில் கழுவி, மென்மையான துணியால் துடைத்து உலர வைக்க வேண்டும்.

— உங்கள் பைக் அல்லது ட்ராலி பேக்-ஐ சுத்தம் செய்ய, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் அரை டீஸ்பூன் பற்பசையை கலந்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். பின்னர், உங்கள் டிராலி பேக்கின் கறை படிந்த இடத்தில் பேஸ்டை தடவி, சுத்தமான துணி அல்லது பிரஷ் மூலம் மெதுவாக தேய்க்க வேண்டும். நீங்கள் ஸ்க்ரப்பிங் செய்து முடித்ததும், சுத்தமான, ஈரமான துணியால் பற்பசையைத் துடைக்கவும். உங்கள் பைக்கை புதிதுபோல் பளபளக்கச் செய்யவும் இந்த டிப்ஸை முயற்சி செய்யலாம்.

— டைல்ஸ் கறைகளை நீக்கி சுத்தம் செய்ய பற்பசையை வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். இதற்குப் பிறகு, டைல்ஸ் மீது பற்பசையை தடவி, மென்மையான ஸ்க்ரப்பிங் பிரஷ் அல்லது துணியால் ஸ்க்ரப் செய்யவும். ஈரம் காய்ந்ததும் பார்த்தால் புதிதுபோல் மின்னும்.

— சுவர்களில் உள்ள சிறு சிறு ஆணி துளைகளை அடைக்கவும் இந்த பேஸ்ட் பயன்படுகிறது. பற்பசையை துளை மீது தடவி, அதை முழுமையாக உலர வையுங்கள். பற்பசை காய்ந்தவுடன், பாருங்கள் அங்கு துளை இருந்த சுவடே தெரியாத படி அழகாகிவிடும்.

— சிங்க் குழாய்களை சுத்தம் செய்ய பற்பசையுடன் சிறிது வெள்ளை வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையை குழாயில் தடவி, பிரஷ் கொண்டு நன்கு தேய்க்கவும். பின்னர் குழாயை சுத்தமான தண்ணீரில் கழுவினால் குழாய் புதிதுபோல் மாறிவிடும்.

— கண்ணாடியை சுத்தம் செய்ய, பற்பசையை ஒரு துணியில் தடவி, கண்ணாடியின் மேற்பரப்பை சுத்தமான துணியால் தேய்க்கவும். குறைந்த செலவில் நொடியில் உங்கள் கண்ணாடி புதிதாகிவிடும்.

Chella

Next Post

BEL நிறுவனத்தில் B.E முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு...! 24-ம்‌‌ தேதி வரை விண்ணப்பிக்கலாம்...!

Fri Apr 21 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer – I, பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 38 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 5 […]

You May Like