fbpx

Cholesterol | கொலஸ்ட்ராலை குறைக்கும் வேர்க்கடலை..!! தினமும் ஒரு கைப்பிடி..!! இவ்வளவு நன்மைகளா..?

வேர்க்கடலை மலிவான பாதாம் என்று அழைக்கப்படுகிறது. ஆரோக்கியத்தின் பார்வையில், வேர்க்கடலை சாப்பிடுவதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த வேர்க்கடலை உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதனால், இதயம் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

கொலஸ்ட்ரால் காரணமாக, உடல் பல ஆபத்தான நோய்களால் சூழப்படலாம் என்பதை அனைவரும் அறிந்திருக்க கூடும். வேர்க்கடலை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது சரியல்ல. வேர்க்கடலை கொலஸ்ட்ராலை அதிகரிக்காத பல சத்துக்கள் உள்ளன.

வேர்க்கடலையில் கொலஸ்ட்ரால் குறைப்பு :

வேர்க்கடலை மிகவும் சுவையான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். இதை சாப்பிடுவதால், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காது. தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வேர்க்கடலை உடல் பருமனை அதிகரிக்கும் என்று பலர் நம்பினாலும், இது முற்றிலும் தவறு. வேர்க்கடலையில் கொலஸ்ட்ராலை அதிகரிக்காத மோனோசாச்சுரேட்டட் அதிகம் உள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி, வாரத்திற்கு 2 முறையாவது வேர்க்கடலை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறுகின்றனர். இது தவிர சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு 5 முறையாவது சாப்பிட வேண்டுமாம். வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு அபாயத்தை பெருமளவு குறைக்கலாம். இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது.

வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

  • கொலஸ்ட்ராலை குறைக்க வேர்க்கடலை உதவுகிறது.
  • வேர்க்கடலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
  • வீக்கத்தைக் குறைக்கும்.
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
  • எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

Chella

Next Post

Chess World Cup 2023 | சாம்பியன் பட்டம் வென்றார் மாக்னஸ் கார்ல்சன்..

Thu Aug 24 , 2023
அஜர்பைஜானின் பாகுவில், கடந்த ஜூலை 30ஆம் தேதில் முதல் செஸ் உலகக் கோப்பை 2023,வெகு விமர்சையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 206 வீரர்கள் பங்குபெற, ஒற்றை-எலிமினேஷன் விளையாட்டு முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட்மாஸ்டர் (ஜிஎம்), ஆர். பிரக்ஞானந்தா பங்குபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் உலக நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோதினார். இறுதிப் […]

You May Like