fbpx

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களே எச்சரிக்கை ..!!!

கண்களில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டாம் என தனியார் கண் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்கும் போது கண்களில் காயங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. து தீவிர தன்மையானது லோசான எரிச்சலில் இருந்து விழித்திரையில் சிக்கல்களை விளைவிக்கின்ற கருவிழி சிராய்வுகள் பார்வைதிறனை இழக்கச் செய்கின்றன .

பட்டாசுகளில் வேதிப்பொருட்கள்நிறைந்துள்ளன. இதனால் தொடர்புகை , தொண்டையிலும் , கண்களிலும் எரிச்சலை ஏற்படுத்தி கண்களில் நீர் வழியச் செய்கின்றன. பட்டாசு வெடிக்கும் போது வெளி வரும் புககையால் தொண்டைக்கு பாதிப்பு ஏற்படுவதோடு பிற தொற்று பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தங்கத்தை உருக்கும் உயர் வெப்ப நிலையில் எரிவதால் , கான்ட்ாக்ட் லென்ஸ் கண்களுக்கு எரிச்சலை ஏற்படத்தும் எனவே கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருந்தால் எச்சரிக்கையுடன் இருங்கள் என அறிவுறுத்தப்படுகின்றது.

பட்டாசுகளால் கண்களில் கருவிழி காயம், மூடிய நிலை கருவிழி காயம், துளையுடன் கூடிய காயங்கள் ஏற்படும். இதுபோன்ற காயங்கள்ஏற்பட்டால், கண்களை தேய்க்கவோ அல்லது கண்களை சொறியவோ கூடாது. கண்களையும், முகத்தையும் நன்றாக கழுவ வேண்டும். கண்ணில் எரிச்சல் அல்லது வேறு பொருள் இருக்குமானால், கண் இமைகளை நன்கு திறந்து வைத்து, கண்களை நீரால் தொடர்ந்து அலச வேண்டும். கண்களில் துகள் இருந்தால், அவற்றை நீங்களே எடுக்க முயற்சிக்க வேண்டாம். கண்களை மூடிய நிலையில், உரிய கண் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

பட்டாசு வேதிப்பொருட்கள் கண்களில் பட்டால் 30 நிமிடங்களுக்குள் அவற்றை நீரைக் கொண்டு அலசிய பிறகு, மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். வலி நிவாரணி மருந்துகள், ஆயின்மென்டை பயன்படுத்தக் கூடாது. கண் கவசங்களை அணிந்து, திறந்தவெளி இடத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பின்னர் சுத்தமான நீரைக் கொண்டு கைகளை கழுவ வேண்டும்.

Next Post

கணவன் டிவோர்ஸ் நோட்டீஸ் : மனித வள மேலாளர் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை …

Thu Oct 20 , 2022
கணவன் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பனத்தூர் – வர்தூர் சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் உபசனா . 34 வயதான இவர்தனியார் நிறுவனத்தில் மனித வள துறை மேலாளராக பணி புரிந்து வந்தார். ’ கை நிறைய சம்பாதிக்கும் இவருக்கு என்ன கவலை இருக்க போகின்றது என […]

You May Like