fbpx

அடடே சூப்பர்..!! ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு..!! மாணவிகளுக்கு இலவச பயிற்சி..!! முழு விவரம் உள்ளே..!!

தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டு தோறும் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தி வருகிறது. அந்த வகையில், 2022-2023ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவிகள் இதில் கலந்து கொண்டு பலனடையலாம்.

அடடே சூப்பர்..!! ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு..!! மாணவிகளுக்கு இலவச பயிற்சி..!! முழு விவரம் உள்ளே..!!

பயிற்சி வகுப்புகள்: சென்னை இராணி மேரி கல்லூரி, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

முக்கியமான நாட்கள்:

ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 14.11.2022 தேதி முதல் 24.11.2022 வரை.

எழுத்துத் தேர்வு: 01.12.2022 (முற்பகல் 10.30 முதல் 12.30 மணி வரை)

எழுத்துத் தேர்வு முடிவுகள்: 05.12.2022

வயது வரம்பு: 14.11.2022 அன்று விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு மேலும், 32 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். பட்டியல் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரங்களுக்கு 5 ஆண்டுகள் வயது வர்மப்பில் சலுகை உண்டு. பிறப்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடையவராவர்.

பயிற்சி காலம்: குறைந்தது 6 மாதம்

ராணிமேரி கல்லூரி அல்லது மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே வகுப்புகள் நடைபெறும்.

தெரிவு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நுழைவுத் தேர்வு, நேர்காணல் அனைத்தும் தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே நடைபெறும்.

விண்ணப்பம் செய்வது எப்படி..?

இராணி மேரி கல்லூரி, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி இணையதளத்தில் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து வரும் 24ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், தேசிய வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூ. 200 வரைவோலை ( demand Draft) உடன் கல்லூரி நிர்வாக முதல்வருக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப தபால் அட்டையில், CIVIL SERVICES EXAMINATIONS COACHING APPLICATION FOR ENTERANCE EXAMINATION” என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். வரைவோலையின் பின்புறம் விண்ணப்பதாரின் பெயர், முகவரி எழுதியிருக்க வேண்டும்.

Chella

Next Post

டிவியை பழுது நீக்கி தராததால் மெக்கானிக் கொலை..!! ஆம்புலன்ஸை ஏற்றிக்கொன்ற டிரைவர் பகீர் வாக்குமூலம்..!!

Fri Nov 18 , 2022
விருதுநகரில் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில், குற்றவாளியின் வாக்குமூலம் போலீசாரையே அதிரவைத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் சங்கரலிங்கம் (42). இவர் பட்டம்புதூரில் டிவி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சங்கரலிங்கம் பட்டம் புதூரில் இருந்து R.R. நகரில் உள்ள உணவகத்துக்கு சாப்பிட சென்று விட்டு திரும்பி தன்னுடைய இருச்சக்கர வாகனத்தில் பட்டம்புதூர் நோக்கி […]
டிவியை பழுது நீக்கி தராததால் மெக்கானிக் கொலை..!! ஆம்புலன்ஸை ஏற்றிக்கொன்ற டிரைவர் பகீர் வாக்குமூலம்..!!

You May Like