fbpx

உங்கள் வீட்டில் சிவன் படம் இருக்கா.? உடனே இதை செய்யுங்கள்.!

குடியிருக்கும் வீட்டில் சிவனின் படத்தை தனியே வைக்க கூடாது எனவும், பார்வதியுடன் சேர்ந்து இருக்கின்ற ஜோடியான புகைப்படத்தை மட்டுமே வைக்க வேண்டும் என்றும் பல ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர். சிவனின் பக்தர்களாக இருக்கும் பலரும் வீட்டில் சிவனின் புகைப்படத்தை அல்லது உருவ படத்தை வைத்திருப்பார்கள். 

அதுபோல சிவனை தனியாக இருப்பது போல வைத்திருக்கக் கூடாது. அவர் பார்வதி தேவியுடன் தம்பதிகளாக இருக்கும் படத்தை தான் வீட்டில் பயன்படுத்த வேண்டும். இதை மீறி சிவனின் படத்தை தனியாக வைத்தால் தம்பதிகளுக்குள் பிரச்சனை ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுவதாக தெரிவிக்கின்றனர். 

கணவன் மனைவி இருவரும் புரிதலுடனும், ஒற்றுமையாகவும், செல்வ செழிப்புடனும் வாழ வேண்டும் என்றால் அவர்கள் சிவன் பார்வதி ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கலாம். குழந்தை இல்லாத தம்பதிகள் அவர்களுக்கு குழந்தை வேண்டுமென்றால் சிவன் பார்வதியுடன் அவர்களது செல்வங்களான முருகன் மற்றும் விநாயகர் குழந்தைகளாக இருக்கும் குடும்ப புகைப்படத்தை வைத்து பூஜிக்கலாம். 

சிவனுக்கு மிகவும் ஏற்ற நாளாக இருப்பது திங்கள் கிழமை தான். திங்கள் கிழமையில் வரும் பிரதோஷத்தை சோமவார பிரதோஷம் என்று கூறுவார்கள். திங்கள் கிழமை நாம் சிவனுக்கு விரதம் இருந்து பூஜை செய்தால் நாம் நினைத்தது அனைத்தும் நினைத்தபடியே நடக்கும். அத்துடன் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க திங்கள்கிழமை சிவன் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் தரிசனம் செய்துவிட்டு வருவது நல்லது.

Rupa

Next Post

இந்திய ரயில்வேயின் வலைதளத்தில் மொத்தம் 1251 நிறுவனங்கள் பதிவு...!

Wed Jan 10 , 2024
பல்வேறு கண்டுபிடிப்பு சவால்களில் பங்கேற்க இந்திய ரயில்வேயின் வலைதளத்தில் மொத்தம் 1251 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. பல்வேறு கண்டுபிடிப்பு சவால்களில் பங்கேற்க இந்திய ரயில்வேயின் வலைதளத்தில் மொத்தம் 1251 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 23 திட்டங்களின் மதிப்பு ரூ.43.87 கோடி ஆகும்.ஸ்டார்ட் அப்கள் எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் பங்கேற்பின் மூலம் புத்தாக்கத் துறையில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான முயற்சியை மேற்கொண்டுள்ளது. ரயில்வேக்கான […]

You May Like