fbpx

சாமி கும்பிடும்போது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதா..? அப்படினா இனி கவலைப்படாதீங்க..!!

கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் என்ன அர்த்தம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அருளின் இருப்பு என்பது வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஆழ்ந்த அனுபவம். இந்த இருப்பை உணர்வது ஒரு சிலருக்கு இறை தரிசனத்தின்போது நிகழலாம். வேறு சிலருக்கு குரு தரிசனத்தின்போதும் நிகழலாம். அந்த தரிசன கணத்தின் உணர்வு என்பது காரண அறிவிற்கு அப்பாற்பட்டது. தன்னை மீறிய ஒன்று தனக்குள் நிகழ்வதை உணர்கையில், கண்ணீர் வழிந்தோடும். இதை அனுபவிக்க மட்டுமே முடியும், ஆராயவோ, விவரிக்கவோ முடியாது.

மனசோர்வு, அமைதியற்ற நிலையில் இருக்கும் போது நாம் கடவுளை அதிகமாக வேண்டுகிறோம். கோயிலுக்குச் செல்ல முயற்சி செய்கிறோம். மன உளைச்சல் காரணமாகவே சிலர் கோயிலுக்குச் செல்ல விரும்புகின்றனர். அப்படி நீங்கள் மனமுடைந்து கடவுளை வேண்டும்போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? உங்களுக்கு பிடித்த கடவுளை நீங்கள் வழிபடும் பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அதற்கு அர்த்தம் கடவுள் உங்களுக்கு ஏதோ குறிப்பைச் சொல்கிறார். அதாவது கடவுள் உங்களிடம் ஒரு குறிப்பை கொடுக்கிறார் என்று பொருள். அவற்றை நீங்கள் புரிந்து கொண்டால் அந்தப் பிரச்சனை நீங்கிவிடும்.

உங்கள் வேண்டுகோளை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்று பொருள், கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் உங்களது பிரார்த்தனை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. உங்களது கோரிக்கையை கடவுள் ஏற்றுக்கொண்டார். இனி எல்லா பிரச்சனையும் நீங்கி, உங்கள் ஆசைகள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

Kokila

Next Post

2024-ம் ஆண்டிற்குள் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்..‌! மத்திய அரசு தகவல்....

Mon Feb 13 , 2023
அனைவருக்கும் நியாயமான விலையில், தரமான மருந்துகள் கிடைப்பதற்கு மருந்து உற்பத்தித் துறை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் மூலம் பிரதமரின் தேசிய மக்கள் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஏற்கெனவே 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. 2024-ம்ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000-மாக அதிகரிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மொத்தம் 1,759 மருந்துகளும், 280 அறுவைச் சிகிச்சை உபகரணங்களும் […]

You May Like