fbpx

கடைகளில் பில் போடும் போது உங்கள் செல்போன் எண்ணை கொடூப்பீர்களா..? வெளியான அதிரடி அறிவிப்பு..!!

சமீப காலங்களாக ஷாப்பிங் மால்கள், மார்ட்கள் போன்ற இடங்களில் கடைகளில் பொருள்களை வாங்கி பில் போடும் போது அங்கு கவுண்டர்களில் இருக்கும் ஊழியர் வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பரை வாங்கி பதிவு செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு சில ரீடெயில் கடைகளில் செல்போன் எண்ணை கொடுத்தால் தான் பில்லே ஜெனரேட் செய்ய முடியும் என்ற நடைமுறைகள் கூட இருக்கிறது. இந்த கடைகள் தங்களின் ஆஃபர்கள், ஷாப்பிங் பாயிண்ட்ஸ், சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை வாடிக்கையாளர்களிடம் கூறுவதற்காக தான் செல்போன் எண்ணை வாங்குவதாகக் கூறுகின்றனர்.

ஆனால், பல வாடிக்கையாளர்களுக்கு தங்கள் செல்போன் எண்ணை மற்றவர்களிடம் பகிர்வதில் பெரும் தயக்கம் உள்ளது. பல சைபர் மோசடிகள் நடக்கும் காரணத்தினாலும், செல்போன் எண் என்பது நமது தனிப்பட்ட பிரைவசியை உள்ளடக்கியது என்பதாலும் செல்போன் எண்ணை கேட்பது சரியல்ல என்று புகார்கள் பல நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் புகார்களை பரிசீலத்த அமைச்சகம், சில்லரை வியாபாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக துறையின் செயலாளர் ரோகித் குமார் சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”வாடிக்கையாளர்கள் தங்களின் தனிப்பட்ட செல்போன் எண் விவரங்களை தரவில்லை என்றால் பில் போட முடியாது என்று சில வியாபாரிகள் கூறுகின்றனர். இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நியாமற்ற செயல். இப்படி வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணை வாங்கி சேகரிப்பதில் பிரைவசி குறித்த ஐயமும் உள்ளது. இது தொடர்பாக ரீடெயில் வியாபாரிகள், சிஐஐ, பிக்கி போன்ற அமைப்புகளுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் ரீடெயில் வியாபாரிகள் அவர்களின் மொபைல் எண்ணை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது” என்று அவர் கூறினார்.

Chella

Next Post

தேனி அருகே….! நரிக்குறவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தவர் மீது தாக்குதல் நடத்திய ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது…..!

Wed May 24 , 2023
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருணாகப் பள்ளியைச் சேர்ந்தவர் சித்திக் (62) இவர் சொந்த வேலையின் காரணமாக நேற்று முன்தினம் தேனி மாவட்டத்திற்கு வந்திருந்தார். கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் இருக்கின்ற தனியார் ஓட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த ஹோட்டலுக்கு வெளியே நின்று இருந்த சில நரிக்குறவர்கள் இவரிடம் யாசகம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் சித்திக் பணம் கொடுக்காமல் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று 5 பேருக்கும் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like