ஒருவர் தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடித்தால், அது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, கவலையையும் குறைக்கும். ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்…
திராட்சை இதயத்திற்கு நல்லது என்று பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. திராட்சைப் பழத்தில் உள்ள ரெஸ்வெராட்ரோல் முகப்பருவை குணப்படுத்தும் என்று டெர்மட்டாலஜி அண்ட் தெரபி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. ரெட் ஒயின் என்பது பல்வேறு வகையான திராட்சை பழங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. ரெட் ஒயினுக்காக பயன்படுத்தப்படும் திராட்சைகளில் ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
ரெட் ஒயின் குடிப்பவர்களுக்கு உடல் எடைக்கு ஏற்ற உயரம் சரியாக இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் தான் ரெட் ஒயினை அளவோடு பருகுவது ஆரோக்கியமானது என கூறப்படுகிறது. ரெட் ஒயினை அளவாக குடிப்பதன் மூலம், கல்லீரல் நோய்கள், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்றவற்றின் தாக்கத்தைத் தடுக்கலாம். ரெட் ஒயின் குடிப்பதால் தோலின் நிறம் கூடும், சரும பொழிவு மேம்படுவதோடு இளமை தன்மையும் அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். குறிப்பாக, இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஒருவர் தினமும் ஒரு டம்ளர் ரெட் ஒயின் குடித்தால், அது மன அழுத்தத்தை குறைப்பதோடு, கவலையையும் குறைக்கும். ஆகவே, இரவு நேர உணவிற்கு முன்பு ஒரு டம்ளர் ரெட் ஒயின் அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ரெட் ஒயினில் தூக்கத்தை தூண்டும் மெலடோன் என்ற உட்பொருள் அதிகளவில் உள்ளது. எனவே தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ரெட் ஒயினை தினமும் ஒரு டம்ளர் குடிக்கலாம். ஆனால், இரவு தூக்கத்திற்கு செல்லும் முன்பு குடிக்க வேண்டும். குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பே குடித்து விட வேண்டும். ஒயின் குடிப்பது ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. இது சுருக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது. சரும செல்களுக்கு பாதுகாப்பு அளித்து, இளமையை தக்க வைக்கிறது. இருப்பினும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருவர் ரெட் ஒயினை மிதமான அளவுகளில் குடித்தால் சில வகை கேன்சர், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும். மது அருந்துவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நமக்கு தெரியும். ஆனால், ரெட் ஒயின் நன்மை பயக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இன்றைய மாடர்ன் உலகில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஒயின் குடிப்பது சாதாரண விஷயமாக மாறிவிட்டது. பெரு நகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்கள் ரெட் ஒயினை விரும்பி அருந்துகின்றனர்.