fbpx

தினமும் வாக்கிங் செல்வதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..? இந்த நோய்கள் உங்களை நெருங்காது..!!

உடல் ரீதியாகவும், ஆரோக்கியத்துக்காகவும் ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். ஆனால், சிலருக்கு நேரமின்மை காரணமாகவும் சிலருக்கு இதை செய்தால் உடம்பு ஃபிட்டாக மாறும், ஆரோக்கியமாக மாறும் அல்லது எடை குறையும் என்பது பற்றிய தெளிவின்மை இல்லாததாலும் எதுவும் செய்யாமலேயே இருக்கின்றனர். நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், அல்லது கடுமையான டயட் இருக்க வேண்டுமென்று கடினமான விஷயங்களை பலராலும் செய்ய முடியாது. நம் வாழ்க்கை முறையில் சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வந்தாலே உடல் ஃபிட்டாகத் தொடங்கிவிடும். அதற்கு தினமும் நடைபயிற்சி செய்தாலே போதும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நடைபயிற்சி செய்வது உடலுக்கு ஃபிட்னஸ்சை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும், நீங்கள் மிகவும் எனர்ஜிடிக்காக உணர்வீர்கள். நடைபயிற்சி செய்வது மிகவும் எளிது. இதற்காக நீங்கள் எந்த பயிற்சியாளரிடமும் பயிற்சி பெற வேண்டாம். நடப்பது என்பது அவ்வளவு கடினமானதல்ல. ஆனால் தினமும் நடைபயிற்சி செய்வதற்கு சுய ஒழுக்கம் மட்டுமே தேவை. அதை நீங்கள் பின்பற்றினாலே எளிதாக, எந்த வயதாக இருந்தாலும் உங்கள் பிட்னஸ் பயணத்தை தொடங்கலாம். உடல் எடையை குறைப்பதற்கும் உடலின் ஆரோக்கியத்தை சிறப்பாக மேம்படுத்துவதற்கும் நமக்கு இருக்கும் மிக எளிமையான மற்றும் செலவே இல்லாத வழி என்றால், அது நடைபயிற்சிதான்.

நடைபயிற்சி செய்வது தலை முதல் கால் வரை இரத்த ஓட்டத்தையும் ஆக்சிஜன் ஓட்டத்தையும் அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனைத்து செல்களுக்கும் ரத்த ஓட்டம் கிடைப்பதை உறுதி செய்கிறது. உங்கள் மூளைக்கும் ரத்தம் அதிகமாக பாய்வதால் அது உங்களை சுறுசுறுப்பாக்கி, மூளைத் திறனை அதிகரிக்கிறது. பொதுவாக உடற்பயிற்சி செய்தாலே சோர்வாக இருக்கும் என்ற தவறான எண்ணம் இருக்கிறது. ஆனால், நடைபயிற்சி மேற்கொள்ளும்போது வழக்கத்தை விட நீங்கள் ஆக்டிவாக இருப்பதை உணர்வீர்கள்.

நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மற்றும் பாதுகாப்பான உடற்பயிற்சி நடைபயிற்சி இது தான். உங்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க மற்றும் கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பவர்களுக்கு நடைபயிற்சி தினசரி தேவையான சூரிய ஒளியைப் பெறுவதில் உதவுகிறது. சூரியஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி சத்து மூளையை சுறுசுறுப்பாக இயங்குவதற்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியம். உடலுக்கு வேலை கொடுக்காமல் இருக்கும் பொழுது இருக்கும் மூட்டுப் பகுதிகள் இறுக்கமாகி பாதிப்படையும் தன்மை ஏற்படுகிறது. மூட்டுகளை நெகழ்வாக வைப்பதற்கு நடைபயிற்சி சிறந்த மற்றும் எளிமையான உடற்பயிற்சியாகும்.

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் கடினமான உடற்பயிற்சி செய்துதான் இதயத்தையும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே நேரத்தில் குறைந்த அளவாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு நடைபயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை அல்லது குறிப்பிட்ட காலம் வரை நடக்கும் பொழுது உடலில் எண்டார்பின் என்ற ஹார்மோன் ரிலீஸ் ஆகும். இது இயற்கையான வலி நிவாரணியாகும். மற்றும் உங்கள் மனநிலையை மேம்படுத்தக்கூடிய ஹார்மோன். இதனால் நீங்கள் அமைதியாகவும், புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள். நடைபயிற்சி செய்யும் பொழுது வெளியே செல்வது மிகவும் நல்லது. இது இயற்கையோடு உங்களை கனெக்ட் செய்ய உதவும்.

Read More : ”ஒரு முடிவோட தான் போனேன்”..!! ”உடலுறவின்போது மேலே அமர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றேன்”..!! கள்ளக்காதலி பகீர் வாக்குமூலம்..!!

English Summary

Walking offers various health benefits beyond fitness and weight loss. You can see about it in this post.

Chella

Next Post

தமிழகமே..! 3 நாள் தொடர் விடுமுறை... 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு...!

Thu Feb 6 , 2025
Announcement that 1,320 special buses will operate for 3 consecutive days of holiday...

You May Like