fbpx

நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்..? இது உண்மையா..? விவரம் இதோ..!!

நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது உண்மையல்ல என்று ஆய்வுகள் கூறுகின்றன. நெய்யுடன் சிலவற்றை சேர்த்து சாப்பிடும்போது உடல் எடை குறைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க செய்கிறது. எந்தெந்த பொருட்களுடன் நெய் கலந்து சாப்பிட்டால் அதிக நன்மைகளைத் தரும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இலவங்கப்பட்டையில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் நிறைந்துள்ளன. இது பல நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, செரிமானத்தை அதிகரிக்க செய்கிறது. நெய்யுடன் பயன்படுத்தும்போது இதன் பலன் அதிகம். முதலில் ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி அதில் சில இலவங்கப்பட்டையை சேர்த்து, 4 முதல் 5 நிமிடங்கள் சூடாக்கி, தீயை அணைத்து வடிகட்டி பயன்படுத்தலாம்.

மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு உள்ளது. எடை இழப்பு மற்றும் இதய ஆரோக்கியத்திற்காக இது பெரிதும் உதவுகிறது. மஞ்சளை நெய்யுடன் சேர்த்து உட்கொள்வதால் உடலில் அனைத்து விதமான வீக்கமும் குறைகிறது. முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் நெய், 1 தேக்கரண்டி மஞ்சள், 1/2 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து காற்று புகாத டப்பாவில் சேமித்து பயன்படுத்தவும். மேலும், துளசி ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். இது பார்வையை மேம்படுத்தும். ஒரு பானையில் நெய்யுடன் சிறிது துளசி இலைகளைச் சேர்த்துப் பயன்படுத்தவும்.

Read More : ”இனி வீட்டு உபயோக சிலிண்டரில் QR கோடு”..!! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய செய்தி..!!

English Summary

Many people believe that eating ghee will increase body weight. But studies show that this is not true.

Chella

Next Post

இவர்கள் ஒன்றும் சாதிக்கவில்லை!. ஐபிஎல், சிஎஸ்கே கேப்டனை கேலி செய்த பாக்.வீரர்!

Tue Jul 9 , 2024
They have not achieved anything! IPL, Pakistani player mocked CSK captain!

You May Like