நாம் சாப்பிடும் உணவு மட்டுமல்ல அந்தந்த சீசனில் நிலவும் கிளைமேட்டும் சேர்ந்து தான் நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோல குறிப்பிட்ட கிளைமேட்டிற்கு பொருந்தாத உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வது காரணமே இல்லாமல் நம்மை மந்தமாக அல்லது எரிச்சலாக உணர வைக்கக் கூடும். எந்த சீசனிலும் நமது உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்வது மிக முக்கியம். அதுவும் வெயில் சுட்டெரிக்கும் கோடை என்றால் கட்டாயம் போதுமான நீர்ச்சத்துடன் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது அவசியமாகிறது.
தற்போது வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ள நிலையில், சூடான இந்த கிளைமேட்டில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் பானங்களின் பட்டியலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
— இந்த கோடை காலத்தில் நீங்கள் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க விரும்பினால், இந்த சீசன் முழுவதும் காஃபி குடிப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் அல்லது வழக்கத்தை விட குறைவாக காஃபி குடிக்கலாம்.
— ட்ரை ஃப்ரூட்ஸ் எனப்படும் உலர் பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஊட்டமளிக்க கூடியதாக இருந்தாலும், இவை உடலின் வெப்பநிலையை உயர்த்தும். இதனால் கோடை காலத்தில் எரிச்சல் உணர்வு மற்றும் சோர்வு ஏற்படும்.
— கோடைகாலத்தில் மில்க்ஷேக்ஸ் குடிக்க நம் அனைவருக்குமே மிகவும் ஆசையாக இருக்கும். ஆனால், மில்க்ஷேக்ஸ்களில் அதிக சுகர் கன்டென்ட் இருப்பதால் உடலை மிகவும் டிஹைட்ரேட்டாக்க வாய்ப்பு இருக்கிறது.
— ஊறுகாயில் சோடியம் அதிகமாக உள்ளதால், இது உடலில் நீரிழப்பு ஏற்பட காரணமாக இருக்கிறது. இது தவிர கோடை காலத்தில் ஊறுகாயை அதிகம் சாப்பிடுவதால், அஜீரண கோளாறும் ஏற்படுகிறது. எனவே, கோடை காலத்தில் ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
— காரமான உணவுகளில் Capsaicin பித்த தோஷத்தை எதிர்மறையாக பாதித்து பித்தத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் உடல் சூடேறி விடுகிறது. இதனால், ஏற்படும் அதிகப்படியான வியர்வை, நீரிழப்பு மற்றும் கோடைகால நோய்கள் ஏற்படுகிறது.
— கோடை காலத்தில் வெப்பநிலை ஏற்கனவே அதிகமாக இருக்கும் போது Grilled Meat வகைகளை சாப்பிடுவது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்வதோடு, புற்றுநோய் அபாயத்தையும் உண்டாக்குகிறது.
— சோடாவில் சர்க்கரை மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில கெட்ட பொருட்கள் அதிக அளவில் இருப்பதுடன், இவற்றை பருகுவதால் உங்கள் உடல் விரைவாக நீரிழப்புக்கு (Dehaydrated) உள்ளாகும்.
— பெரும்பாலானோருக்கு பிடித்தமான சமோசா, சாட் வகைகள் மற்றும் ஃப்ரெச் ஃப்ரைஸ் உள்ளிட்ட பல ஃபிரைட் ஃபுட்ஸ்கள் அனைத்தும் டிஹைட்ரேஷனை ஏற்படுத்தும் மற்றும் இந்த கடும் கோடையில் அவற்றை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும்
— நீங்கள் அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை கோடைகாலத்தில் உட்கொண்டால், உங்கள் உடல் நீரிழப்புக்கு ஆளாக கூடும். உடலில் இருக்கும் நீர்ச்சத்தை உப்பு உறிஞ்சும் என்பதால் சோம்பல் முதல் மயக்கம், சோர்வு வரை உடலில் பாதகமான விளைவுகள் ஏற்படும்.
— கோடை காலத்தில் மது அருந்துவது தலைவலி, வாய் வறட்சி மற்றும் உடல் வெப்பநிலை அதிகரிப்பு உள்ளிட்ட பல டிஹைட்ரேஷன் அறிகுறிகளை ஏற்படுத்தும்.