நாம் அனைவருக்கும் மிகவும் கஷ்டமாக உள்ள ஒரு விஷயம் என்னவென்றால், அது நமது துணிகளை எப்படி தூய்மையாகவும், எப்போதும் புதியதுப்போலவும் வைத்துக்கொள்ளுவது என்பதுதான் அதற்கான சில டிப்ஸ் பற்றித்தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். அப்படி என்ன டிப்ஸ் என்றுதானே யோசிக்கிறீர்கள்..! இந்த பதிவை முழுதாக படித்தால் உங்களுக்கே புரியும்.
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஜீன்ஸ் பேண்ட், ஜீன்ஸ் சட்டை போன்ற ஆடைகளை பயன்படுத்துகிறோம் அப்படி பயன்படுத்தும் ஆடைகளில் உள்ள அழுக்கை நீக்கி தூய்மையாக துவைக்க மிகவும் கஷ்டப்பட்டு வந்திருப்போம். ஆனால், இனிமேல் அப்படி கஷ்டப்பட வேண்டாம் இந்த ஒரு டிப்ஸை செய்து பாருங்கள் உங்களுக்கே மிகவும் எளிமையாக இருக்கும்.
டிப்ஸ்
முதலில் இந்த ஜீன்ஸ் பேண்ட், ஜீன்ஸ் சட்டை போன்ற ஆடைகளை துவைப்பதற்கு முன்னாள் ஒரு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் கல்லுப்பை சேர்த்து அதனுடன், நமக்கு தேவையான அளவு சோப்பு பவுடரை சேர்த்து நன்கு கலந்துவிட்டப்பிறகுதான் அதில் நமது துணிகளை ஊறவைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், சோப்பு பவுடரில் உள்ள கெமிக்கல் நேரடியாக நமது துணிகளில்படும். அப்படி படுவதால் நமது துணிகள் விரைவில் சேதமடைந்துவிடும். இப்படி ஊறவைத்த பிறகு நமது ஜீன்ஸ் பேண்ட், ஜீன்ஸ் சட்டை போன்ற ஆடைகளை துவைத்தால் மிகவும் விரைவில் எளிமையாக துவைத்துவிடலாம்.
அடுத்து நாம் அனைவரின் வீட்டிலேயும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களின் சீருடைகளையும் துவைக்க மிகவும் கஷ்டப்பட்டிருப்போம். ஆனால், இனிமேல் அப்படி கஷ்டப்படவேண்டாம். அதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி அதில் சிறிதளவு சோப்பு பவுடரை சேர்த்து அதனை நமது கைகளால் நன்கு கலந்துவிட்டப்பிறகு அதில் பள்ளிச்சீருடைகளை ஊறவைத்து துவைக்கவேண்டும். அப்போதுதான் பள்ளிச்சீருடைகள் விரைவில் கிழிந்து போகாது. பொதுவாக நாம் ஊறவைத்து துவைக்கும் அனைத்து துணிகளையும் 10-15 நிமிடத்திற்குள் துவைத்துவிடவேண்டும். அப்போதுதான் விரைவில் கிழிந்தோ, சுருங்கியோ போகாது.
நமது துணிகள் தூய்மையாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டும் என்றால் ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், அரை டீஸ்பூன் பேகிங்சோடா உப்பு, அதனுடன் துணிகளில் நல்ல வாசனை வருவதற்காக ஒரு டீஸ்பூன் வாசனை திரவம் இவை மூன்றையும் சேர்த்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி நிழலில் காயவைத்து பிறகு அதனை ஒரு சிறிய துணியில் வைத்து நன்கு கட்டி அதனை நாம் துணி வைத்திருக்கும் இடத்தில் போட்டுவைப்பதால் துணிகள் தூய்மையாகவும், வாசனையாகவும் இருக்கும்.