fbpx

வாகன ஓட்டிகளே..!! இதை எப்போதாவது கவனிச்சிருக்கீங்களா..? இனியாவது தெரிந்து கொள்ளுங்கள்..!!

நாம் பயன்படுத்தும் வாகனங்களின் டயர்கள் மட்டும் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளது என தெரியுமா..? இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து விதவிதமான கலர்களில் வாகனங்களை வாங்கினாலும், அதன் டயரின் கலர் கருப்பாகத் தான் இருக்கும். இந்த டயரை கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்னர் தான் முதன் முதலில் கண்டுபிடித்துள்ளனர். அப்போதைய டயர்கள் தற்போதைய கருப்பு கலரில் இல்லை. டயர்கள் பொதுவாக ரப்பரில் தான் செய்யப்படுகிறது. இதனால் ரப்பர் பால் நிறமான பழுப்பு வெள்ளை நிறத்தில் தான் ஆரம்பத்தில் டயர் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் ரப்பர் பாலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டயர்களின் தரம் குறைவாகவும், அதிக நாட்கள் உழைக்காமலும் இருந்துள்ளது. மேலும், வாகனங்கள் சாலையில் செல்லும் போது, கற்கள், முற்கள் ஆகியவைகளில் குத்தி கிழித்து சேதமாக்கியுள்ளது.

வாகன ஓட்டிகளே..!! இதை எப்போதாவது கவனிச்சிருக்கீங்களா..? இனியாவது தெரிந்து கொள்ளுங்கள்..!!

இதனால் டயர்களை வலுவாக மாற்ற ரப்பர் பாலுடன் கார்பன் மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டது. அப்படிச் சேர்க்கப்பட்ட கார்பன் மூலக்கூறுகள் தான் டயருக்கு கருப்பு நிறத்தைக் கொடுக்கிறது. அதுமட்டுமின்றி அதிக நாட்கள் உழைக்கவும் செய்துள்ளது. கார்பன் மூலக்கூறுகள் சாலைக்கும், டயருக்கும் இடையே உள்ள உராய்வு தன்மையைக் குறைக்கிறது. ஆனால், வெறும் ரப்பரினால் ஆன டயர் என்றால் உராய்வு தன்மை அதிகம் இருக்கும். மற்றொரு காரணம் எந்த மாதிரியான வெப்பநிலை என்றாலும், அது நீடித்து உழைப்பதற்கு கார்பன் மூலக்கூறு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத் தவிர வெள்ளை கலரோ அல்லது வேறு ஏதாவது கலரில் டயர்கள் இருந்தால் அதனால் வெப்பத்தைத் தாங்கி கொண்டி நீடித்து உழைக்க முடியாது. டயர் என்பது ஒரு வாகனத்திற்கு முக்கியமான ஒன்றாகும். இதனால் தான் குறைந்த தரத்தில் டயர்களை தயாரிக்க அரசு அனுமதி வழங்குவதில்லை. ஒருவேளை டயர் உற்பத்தியிலும் மாற்றம் தேவை என பல்வேறு கலர்களில் டயர்கள் தயாரித்து விற்பனைக்கு வந்தால், அது விற்பனையாளருக்கு லாபம் அளிக்குமே தவிர, வாகனம் வைத்திருப்பவர்களுக்கு நிச்சயம் பலனைக் கொடுக்காது.

Chella

Next Post

காரில் ஏசி போட்டு தூங்குபவரா நீங்கள்..? இனி அந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! மரணம் நிகழும் அபாயம்..!!

Fri Feb 3 , 2023
காரில் ஏசி போட்டு தூங்குவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீண்ட தூரம் பயணம் செய்யும் போது பலர் காரில் ஏசி போட்டு தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், தற்போது இந்தப் பழக்கம் மரணத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. கார் இன்ஜினில் இருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைட்டை சுவாசிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது போன்று நொய்டாவில் காரில் […]
காரில் ஏசி போட்டு தூங்குபவரா நீங்கள்..? இனி அந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! மரணம் நிகழும் அபாயம்..!!

You May Like