உடல் எடையைக் குறைக்க எப்போதுமே அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உள்ள உணவுகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்த வகையில், போஹா என்னும் அவல் உப்புமா அதிகம் விரும்பப்படுகிறது. சில நிமிடங்களில் செய்யக்கூடிய இந்தக் காலை உணவைத் தயாரிக்க, ஒரு சிறிய கிண்ணத்தில் போஹா மற்றும் ஓட்ஸ் இரண்டையும் ஊறவைக்க வேண்டும்.
பின்னர், கடாயில் நெய்யை சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் பட்டாணி, கேரட், காளான் மற்றும் கேப்சிகம் சேர்த்து வதக்க வேண்டும். அவை ஒன்றாகச் சமைத்த பின்னர் அவல் மற்றும் ஓட்ஸை வாணலியில் சேர்க்கவும். பிறகு வாணலி குறைந்த தீயில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும்.
பின்னர் தேவையான அளவு உப்பு, மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருட்களையும் சேர்க்கவும். பின்னர், அதில் பயிர் வகைகள் மற்றும் வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். இதனை நன்கு கிளறிய பின்னர் அவலை இளஞ்சூட்டில் சுமார் 8 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்.
Read More : சென்னைக்கு மிக கனமழை அலர்ட்..!! தமிழ்நாடு முழுவதுமே தரமான சம்பவம் இருக்கு..!! தேதி குறித்த வானிலை மையம்..!!