பண்டிகை சீசனில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைத்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
பண்டிகை காலங்களில் பல நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இதனால் மிக குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும் என்பதால் குஷி தான். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகிறது. பல்வேறு வகையான பொருட்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும், ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அறிவித்துள்ளன. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தள்ளுபடி சலுகைகள் கவர்ச்சிகரமான விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை சீசனில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைத்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

GT force நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. gt பிரைம் பிளஸ் மற்றும் ஜிடி பிளேயிங் இரண்டு மாடல்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். ஜிடி பிரைம் பிளஸ் ஸ்கூட்டரின் வழக்கமான விலை ரூ.56,692. ஆனால் இந்த சிறப்பு சலுகை பயன்படுத்தி வெறும் 51,692-க்கு வாங்கலாம். அதேபோல 52 ஆயிரம் 500 விலையுள்ள ஜிடி பிளைன் ஸ்கூட்டரை 47 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க முடியும். இந்த சலுகை இதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.