கோவை மாவட்ட நகர்ப்புற மருத்துவ நிலையங்களில் உள்ள மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் காலிப் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்கள்:
மருத்துவ அலுவலர் (49)
பல்நோக்கு சுகாதார பணியாளர் (49)
சுகாதாரப் பணியாளர்
வயது வரம்பு:
மருத்துவ அலுவலர் (40)
பல்நோக்கு சுகாதார பணியாளர் (35)
சுகாதாரப் பணியாளர் (45)
சம்பள விவரம்:
மருத்துவ அலுவலர் – ரூ.60,000
பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் – ரூ.14,000
சுகாதாரப் பணியாளர் – ரூ.8,500
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
மருத்துவ அலுவலர் | MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
பல்நோக்கு சுகாதார பணியாளர் | 12ஆம் வகுப்பு தேர்ச்சி (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்). 10ஆம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் / துப்புரவு ஆய்வாளர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
சுகாதாரப் பணியாளர் | குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
விண்ணப்பிக்கும் முறை:
https://coimbatore.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாகச் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், ரேஸ்கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் மாவட்டம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15.02.2023 மாலை 5 மணி வரை