fbpx

இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு..!! 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

மத்திய அரசின் இந்தியன் ரயில்வே துறையில் கலைஞர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கோட்டாவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு..!! 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

பணியின் முழு விவரங்கள்…

கலைஞர் துறைகாலியிடம்வயதுசம்பளம்
Octopad instrument player118இல் இருந்து 30 வயது வரைரூ.19,900 – 63,200/-
Male Singer118இல் இருந்து 30 வயது வரைரூ.19,900 – 63,200/-

கல்வித்தகுதி:

இந்தியன் ரயில்வேயில் கலைஞருக்கான கோட்டாவில் பணிபுரிய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.

கலைஞர் கோட்டாவிற்கான தகுதி:

Octopad instrument player அரசு அங்கீகரிக்கப்பட்ட இசைக் கல்லூரியில் பயின்றிருக்க வேண்டும்.

Male Singer அரசு அங்கீகரிக்கப்பட்ட இசைக் கல்லூரியில் கிலாசிகல் /லைட் இசை பயின்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்கள் கணினி வழி எழுத்துத் தேர்வு, நடைமுறை தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக்கான கட்டணம்:

SC / ST / Ex-Servicemen / Persons with Disability – ரூ.250/-
மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 17.11.2022 காலை 10 மணி

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16.12.2022 இரவு 11.59 வரை

Chella

Next Post

Ticket வாங்க தூரக்கட்டுப்பாட்டை அதிகரித்து ரயில்வே அமைச்சகம் உத்தரவு...!

Tue Nov 15 , 2022
புறநகர் அல்லாத பகுதிகளில் யுடிஎஸ்ஆன்மொபைல் (UTSONMOBILE) செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள் வாங்குவதற்கான தூரத்தை ரயில்வே அமைச்சகம் 20 கிலோ மீட்டர் வரை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, புறநகர் பகுதிகளில் இந்த தூரம் 5 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புறநகர் அல்லாத பகுதிகளில் யுடிஎஸ் ஆன்மொபைல் செயலி மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பயணிகள் 5 கிலோ மீட்டர் வரை அனுமதிக்கப்பட்டிருந்தனர். புறநகர் பிரிவுக்கு யுடிஎஸ்ஆன்மொபைல் செயலி […]

You May Like